சொல் பொருள்
தள்ளி – மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கியும் அடித்தும் நகர்த்துதல்.
முள்ளி – தாற்றுக் கோலால் அதை இடித்தும் காயை முள்ளியும் நகர்த்துதல்.
சொல் பொருள் விளக்கம்
சண்டி மாட்டைத் தள்ளி முள்ளி ஓட்டுதல் வழக்கம். அவ்வழக்கத்தால் தோன்றிய இணைச் சொல், சுறுசுறுப் பில்லாதவர்களை வேலை வாங்க வேண்டியிருப்பதாகக் கூறுவதாயிற்று. தள்ளுதல் ஏவி ஏவிச் செய்வித்தலும், முள்ளுதல் இடித்துரைத்தும் திட்டியும் செய்வித்தலும் குறித்தது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்