சொல் பொருள்
(பெ) 1.சேனை, 2. ஆடை, முந்தானை
சொல் பொருள் விளக்கம்
1.சேனை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
army
cloth, the front end of a saree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெறல் அரும் தானை பொறையன் பாசறை நெஞ்சு நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர் – நற் 18/5,6 கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும் நெஞ்சு நடுக்கங்கொண்டதினால் தூங்காத வீரர்கள் இரும் துகில் தானையின் ஒற்றி – பரி 16/23 நீண்ட துகிலின் முந்தானையால் நீத்துளிகளை ஒற்றியெடுக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்