Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இடம், சூழல், 2. குலம், 3. ஒழுக்கம், 4. வீடு, 5. பூமி, 6. திண்ணை என்ற சொல்லின் இடைக்குறை

சொல் பொருள் விளக்கம்

1. இடம், சூழல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

place, region, tribe, race, clan, conduct, custom, house, earth, reduced form of the word ‘thinnai’

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 220,221

முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள்
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்

தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே – குறு 45/5

துயரத்தருவது இந்த மருத நிலத்தில் பிறப்பது

ஐம் பால் திணையும் கவினி அமைவர – மது 326

ஐந்துவகை நிலங்களும் அழகுபெறப் பொருந்துதல் தோன்ற

வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் – குறி 205,206

குற்றமில்லாத உயர்குடிப்பிறந்த உயர்ந்தோர் (தம்)சுற்றத்தோடு
விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401

நலம்சிறந்து மிகுகின்ற அவனுடைய தொன்றுதொட்ட ஒழுங்குமுறைப்பட்ட தொன்மையான ஊர்களுக்கு

திணை பிரி புதல்வர்
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ – பரி 16/7,8

வீட்டைவிட்டுத் தனியே வந்து நீராடும் சிறுவரின்
மெல்லிய தலையுச்சியில் இருக்கும் முஞ்சம் என்னும் அணிகலனோடு சேர்ந்துகொள்ள

அளக்கர் திணை விளக்கு ஆக – புறம் 229/10

கடலால் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக

ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து – பட் 263

(சாந்து பூசி)அழகுமிக்க சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளிலேயிருந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “திணை”

  1. மிகவும் சிறப்பான பயனுள்ள முயற்சி .வாழ்த்துகள் .நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *