சொல் பொருள்
(வி) 1. வற்றிச் சுருங்கு, 2. உலர்ந்துபோ, 3. தளர்ந்து வாடு, நலிவுறு
சொல் பொருள் விளக்கம்
1. வற்றிச் சுருங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be wrinkled, get shrunk, get dried up, be fatigued, wearied
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கான வேம்பின் காய் திரங்க கயம் களியும் கோடை ஆயினும் – புறம் 389/2,3 காட்டிலுள்ள வேம்பினுடைய காய்கள் வற்றிச் சுருங்கிப்போக ஆழ்ந்த நீர்நிலை வற்றிப் பிளவுபட்டுக்கிடக்கும் கோடக்காலமாயினும் தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 430,431 தளிர்களோடே இறுகக்கலந்த கட்டழகான மாலையை, நன்கு காய்ந்த கற்றாழை நாரில் (கட்டி)அழகுபெறச் சூடி, பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு – புறம் 370/3 பசி நின்று வருத்த நலிவுற்ற மிகப்பெரிய சுற்றத்தாருக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்