Skip to content
திறை

திறை என்பதன் பொருள்கப்பம், அரசிறை,

1. சொல் பொருள்

(பெ) கப்பம், அரசிறை

2. சொல் பொருள் விளக்கம்

திறை என்பது, பணிவு அல்லது அடங்கியிருத்தலுக்கு அடையாளமாக இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் (செல்வம்) ஆகும். பணம், பொருள், வணிக ஒப்பந்தங்கள்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

tribute, as paid by inferior states

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் – கலி 31/17

பகைவரை வென்று, அவரின் திறைப்பொருளைக் கைக்கொண்டு, பாய்ந்துவரும் திண்ணிய தேரில் வருபவரின்

செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய - பொரு 120

பணியார் தேஎம் பணித்து திறை கொள்-மார் - மது 230

பகை வெம் காதலர் திறை தரு முயற்சி - ஐங் 452/3

பணிந்து திறை பகர கொள்ளுநை ஆதலின் - பதி 17/3

வாடா யாணர் நாடு திறை கொடுப்ப - பதி 53/2

பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின் - பதி 59/12

பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின் - பதி 62/12

தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின் - பதி 66/7

திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி - பதி 71/24

திருந்து அடி தோய திறை கொடுப்பானை - பரி 9/37

பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் - கலி 31/17

ஏற்றவர் புலம் கெட திறை கொண்டு - கலி 106/49

பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை
போல கொடுத்தார் தமர் - கலி 141/24,25

முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை - அகம் 13/2

தம் திறை கொடுத்து தமர் ஆயினரே - அகம் 44/2

அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து - அகம் 84/15

வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து - அகம் 124/2

பணி திறை தந்த பாடு சால் நன் கலம் - அகம் 127/7

நாடு திறை கொண்டனம் ஆயின் பாக - அகம் 334/3

திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே - புறம் 156/6

பகை புல மன்னர் பணி திறை தந்து நின் - புறம் 387/12

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல - சிலப்.வஞ்சி 25/36

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின் - சிலப்.வஞ்சி 25/186

ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் - சிலப்.வஞ்சி 26/52

மண்ணரசர் திறை கேட்புழி - சிலப்.வஞ்சி 29/38

5. பயன்பாடு

கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் திறை செலுத்தாமல் வாழ்வதே தன் பிறப்புரிமை என்றார்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *