சொல் பொருள்
(பெ) 1. இறைவன், கடவுள், 2. தெய்வத்தன்மை
சொல் பொருள் விளக்கம்
1. இறைவன், கடவுள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
God, deity, divine nature
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து உரு உடன் இயைந்த தோற்றம் போல – அகம் 360/6,7 அஞ்சத்தகும் மிக்க வலியுடைய இரு பெரும் தெய்வங்களான சிவன், திருமால் இவர்களது செந்நிறமும் கருநிறமும் ஒருங்கு பொருந்திய தோற்றத்தைப் போல உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் அனையே ஆயின் அணங்குக என் என – அகம் 166/7-9 உயர்ந்த பலிகளையே பெறும் அச்சம்தரும் தெய்வம் அணிந்த கரிய கூந்தலையுடையவளாகிய உன்னால் ஐயுறப்பெற்றாளுடன் யான் புனலாடி வந்தேனாயின் என்னை வருத்துக என்று திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை – சிறு 73 அழகிய முகம் (போல)மலர்ந்த தெய்வத் (தன்மையுடைய)தாமரையிடத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்