சொல் பொருள்
உள்ளே என்ன இருக்கிறது என்பதை அகழ்ந்து பார்த்தல் தோண்டல் ஆகும். தோண்டிய இடத்தில் உள்ளவற்றை உன்னிப்பாக ஆராய்வது, குடைந்து பார்ப்பது ஆகியவை துருவல் ஆகும்.
சொல் பொருள் விளக்கம்
சிலர் சில செய்திகளை வெளிப்படுத்தவே மாட்டார்கள். என்னென்ன வகையால் முயன்றாலும் அவர்கள் அச்செய்தியை வெளியிட மாட்டார்கள் அவர்களிடமிருந்து பலப்பல வினாவி, அம்மறு மொழியை ஆராய்ந்து மடக்கி மடக்கி வினாவி உண்மையை உரைக்க வைத்து விடுவர். அது தோண்டித் துருவுதல் எனப்படும். அவனிடம் மறைத்தால் எப்படியும் தோண்டித் துருவாமல் விடமாட்டான் என்பர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்