Skip to content

தோலான் துருத்தியான்

சொல் பொருள்

தோலான் – ஊதுலைத் துருத்தியின் தோற்பைபோல் பின்னே வருபவன்.
துருத்தியான்- துருத்தியின் மூக்குப் போல முன்னே வருபவன்.

சொல் பொருள் விளக்கம்

ஒருவன் ஒன்றில் மாட்டிக் கொள்ளும்போது அவனுக்காக ஒருவன் பொறுப்பேற்று வந்தால், “ நீ என்ன அவனுக்குத் தோலான துருத்தியானா?” என்று வினாவுவது உண்டு. நீவராதே என்று தடுக்கும் தடையாக வரும் வினா இதுவாம். ஊதுலையில் அமைந்த தோல் துருத்தி அமைப்பைத் தழுவியது இவ்விணை மொழியாம். தோலான் துருத்தியான் எல்லாம் கேட்பான்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *