சொல் பொருள்
தோல் – தோல் என்பதும் வால் என்பதும் உழவர் பயன்படுத்தும் நீர் இறைப்பு பெட்டியொரு இணைந்துள்ள கருவிகள். இரும்பால் தகட்டால்-செய்யப்பட்ட சால் அல்லது கூனையில் இறுக்கிக் கட்டப்பட்ட பெரிய தோல் பை தோல் ஆகும்.
வால் – சாலில் நீர் நிரப்பி கிணற்றில் மேலே கொண்டு வந்து தோல்பை வழியாக நீரை வாய்க்காலில் வடிப்பர். அத்தோலில் இருந்து செல்லும் கயிறு வால்.
சொல் பொருள் விளக்கம்
அது வால் கயிறு எனப்படும். வடத்தொடு சேர்த்துக் கட்டப்படும். வடம் வால் இரண்டும் சாலை மேலும் கீழும் பற்றி மேலிழுத்தும் கீழிறக்கியும் கிணற்று நீரை முகந்து வரும். முகவைப்பாட்டு பழமையானது. இறவை என்பது நீர் இறைக்கும் தொழில் பற்றியது. “இறவைக்குப் போகிறது மாடு” இறைக்கப் போகிறார் என்பது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்