Skip to content
நந்தி

நந்தி என்பது நந்தியாவட்டம்

1. சொல் பொருள்

(பெ) நந்தியாவட்டம். ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும், காளை என்பவர், இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார்

(வி) மிகுந்து, விளங்கி (பெருகி)

2. சொல் பொருள் விளக்கம்

சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படும் காளை வாகனம், சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தியின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்

மொழிபெயர்ப்புகள்

Englishpinwheelflower অসমীয়া: কঠনা ফুল বাংলা: জংলি টগর हिन्दी: चांदनी Bahasa Indonesia: Mondokaki Jawa: Mandhakaki ಕನ್ನಡ: ನಂದಿಬಟ್ಟಲು മലയാളം: നന്ത്യാർവട്ടം मराठी: तगर Bahasa Melayu: Susun kelapa မြန်မာဘာသာ: ဇလပ်ပန်း ଓଡ଼ିଆ: ଟଗର ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱛᱚᱣᱟ ᱵᱟᱦᱟ سنڌي: چانڊاڻ සිංහල: වතු සුද්ද svenska: Fjärilsgardenia தமிழ்: நந்தியாவட்டை ತುಳು: ನಂಜಿಬಟ್ಟಲ್ ไทย: พุดจีบ Tiếng Việt: Ngọc bút 粵語: 狗牙花 中文: 山马茶

நந்தி

3. ஆங்கிலம்

East Indian rosebay, Taberxmontana coronaria, Ervatamia coronaria, Tabernaemontana divaricata

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நந்தி நறவம் நறும் புன்னாகம் – குறி 91

சாறு கொள் ஆங்கண் விழவுகளம் நந்தி/அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் - குறி 192,193

யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற - கலி 33/2

அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் - கலி 53/6

பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் - கலி 78/19

செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் - கலி 78/20

மாரி புறந்தர நந்தி ஆரியர் - அகம் 398/18

களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி/மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி - புறம் 120/5,6
நந்தி
நந்தி
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் - தேவா-சம்:2513/1

நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே - தேவா-சம்:917/4

நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் - தேவா-சம்:958/3

நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் - தேவா-சம்:2768/2

நந்தி நாமம் நமச்சிவாயவே - தேவா-சம்:3325/4

நந்தி நாமம் நமச்சிவாய எனும் - தேவா-சம்:3330/1

பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் - தேவா-அப்:133/3

நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப - தேவா-அப்:545/2

பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த - தேவா-அப்:773/3

நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே - தேவா-அப்:954/4

நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி

நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே - தேவா-அப்:987/3,4

அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே - தேவா-அப்:989/4

பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே - தேவா-அப்:991/4

பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் - தேவா-அப்:2365/3

நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை - தேவா-அப்:2418/1

தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் - தேவா-அப்:3001/1

நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே - தேவா-சுந்:939/4

நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் - தேவா-சம்:2513/1

கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் - தேவா-சம்:1810/2,3

நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே - தேவா-அப்:1063/4

நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் - தேவா-அப்:2497/2

நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன - தேவா-அப்:2804/1

நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் - தேவா-சம்:672/3

நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் - தேவா-சம்:830/2

நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே - தேவா-சம்:3011/4

நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே - தேவா-அப்:851/4

வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் - தேவா-அப்:1870/1,2

நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே - தேவா-அப்:1064/4

நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி - தேவா-அப்:808/3
நந்தி
நந்தி
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1444/4

நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1438/4

நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1439/4

நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1440/4

நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1441/4

நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1442/4

நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1443/4

நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1444/4

நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1445/4

நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே - நாலாயி:1446/4

நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும் - நாலாயி:1447/1
நந்தியாவட்டம்
நந்தியாவட்டம்


பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன் - திருமந்:9/2,3

பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே - திருமந்:11/4

அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே - திருமந்:61/3,4

நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே - திருமந்:62/4

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் - திருமந்:67/1

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் - திருமந்:68/1

நந்தி அருளாலே மூலனை நாடினோம் - திருமந்:68/2

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில் - திருமந்:68/3

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே - திருமந்:68/4

நந்தி இணை அடி நான் தலை மேல் கொண்டு - திருமந்:73/1

அப்படி நல்கும் அருள் நந்தி தாள் பெற்று - திருமந்:74/2

இருந்தேன் என் நந்தி இணை அடி கீழே - திருமந்:80/4

ஞான தலைவி-தன் நந்தி நகர் புக்கு - திருமந்:82/1

அளப்புஇல் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கஅறும் ஆனந்த கூத்தன் சொல்போந்து - திருமந்:91/2,3

நந்தி அருளாலே மூலனை நாடி பின் - திருமந்:92/1

நந்தி அருளாலே சதாசிவம் ஆயினேன் - திருமந்:92/2

நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் - திருமந்:92/3

நந்தி அருளாலே நான் இருந்தேனே - திருமந்:92/4

ஞாலம் அறியவே நந்தி அருளது - திருமந்:99/2

நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம் - திருமந்:107/3

களிம்பு அறுத்தான் எங்கள் கண்_நுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருள் கண்விழிப்பித்து - திருமந்:114/1,2

கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி
தாயினும் மும்மலம் மாற்றி தயா என்னும் - திருமந்:116/2,3

புலங்கள் ஐந்தான் அ பொதுவின் உள் நந்தி
நலம் களைந்தான் உள் நயந்தான் அறிந்தே - திருமந்:118/3,4

நவயோகம் நந்தி நமக்கு அளித்தானே - திருமந்:122/4

சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை - திருமந்:141/1

சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி - திருமந்:141/2

வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால் - திருமந்:141/3

புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே - திருமந்:141/4

இன்ப பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
அன்பில் அவனை அறியகிலாரே - திருமந்:287/3,4

மயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின் - திருமந்:302/1

புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும் - திருமந்:387/1

கூடும் பிறவி குணம் செய்த மா நந்தி
ஊடும் அவர் தமது உள்ளத்துளே நின்று - திருமந்:406/2,3

கூடு மரபில் குணஞ்செய்த மா நந்தி
ஊடும் அவர்-தமது உள்ளத்துளே நின்று - திருமந்:414/2,3

உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி
வெள் உயிராகும் வெளியாய் இலங்கு ஒளி - திருமந்:418/1,2

குசவனை போல் எங்கள் கோன் நந்தி வேண்டில் - திருமந்:443/3

காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் - திருமந்:504/3

திடம் உற்ற நந்தி திருவருளால் சென்று - திருமந்:513/3

காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே - திருமந்:515/4

என் அரு நந்தி எடுத்து உரைத்தானே - திருமந்:518/4

சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே - திருமந்:519/4

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய - திருமந்:523/1

நாசம் அது ஆகுமே நம் நந்தி ஆணையே - திருமந்:534/4

பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே - திருமந்:549/3,4

அழியும் படியை அறிந்த பின் நந்தி
திகழ்கின்ற வாயுவை சேர்தலும் ஆமே - திருமந்:720/3,4

பேராது காயம் பிரான் நந்தி ஆணையே - திருமந்:722/4

சுனையில் ஒன்று ஆக தொனித்தனன் நந்தி
வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால் - திருமந்:785/2,3

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோல குரம்பை - திருமந்:789/1,2

நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டு - திருமந்:806/1

நாரி மருந்து என்றும் நந்தி அருள்செய்தான் - திருமந்:850/2

புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும் - திருமந்:1078/1

தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும் - திருமந்:1079/1

ஓதிய நந்தி உணரும் திருவருள் - திருமந்:1080/1

நாரணி நந்தி நடு அங்கு உரைசெய்த - திருமந்:1088/3

நந்தி இதனை நவம் உரைத்தானே - திருமந்:1089/4

பிரை சதம் எட்டும் முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம் செய்தானே - திருமந்:1090/3,4

பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே - திருமந்:1129/4

உருவம் பல உயிராய் வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில் - திருமந்:1248/1,2

பொருளானது நந்தி பொன் நகர் போந்து - திருமந்:1449/3

சைவ பெருமை தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு - திருமந்:1478/1,2

மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே - திருமந்:1517/3,4

தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே - திருமந்:1534/4

சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு - திருமந்:1540/1,2

நாதம் அது ஆக அறியப்படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில் - திருமந்:1542/2,3

சைவ பெருமை தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு - திருமந்:1567/1,2

பித்தரை காணின் நகும் எங்கள் பேர் நந்தி
எ தவமாகில் என் எங்கு பிறக்கில் என் - திருமந்:1568/2,3

குருவே சிவம் என கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார் - திருமந்:1581/1,2

தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த - திருமந்:1583/1

கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை - திருமந்:1583/2

வான் நந்தி என்று மகிழும் ஒருவற்கு - திருமந்:1583/3

தான் நந்தி அங்கி தனிச்சுடர் ஆமே - திருமந்:1583/4

ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி
தான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே - திருமந்:1592/3,4

பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று - திருமந்:1594/3

பதிவித்த பாத பராபரன் நந்தி
கதி வைத்தவாறும் மெய் காட்டியவாறும் - திருமந்:1596/2,3

ஏனமும் நந்தி பதம் முத்தி பெற்றதே - திருமந்:1675/4

கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே - திருமந்:1725/4

வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே - திருமந்:1729/4

மால் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் - திருமந்:1746/1

தான் நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும் - திருமந்:1746/2

கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின் - திருமந்:1746/3

மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே - திருமந்:1746/4

நானே அறிகிலன் நந்தி அறியும்-கொல் - திருமந்:1796/2

அருளால் என் நந்தி அகம் புகுந்தானே - திருமந்:1800/4

அருளால் என் நந்தி அகம் புகுந்தானே - திருமந்:1801/4

மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதி பராபரன் - திருமந்:1803/2,3

அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே - திருமந்:1804/4

வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி - திருமந்:1815/1

வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆராவமுது அளித்து ஆனந்தி பேர் நந்தி - திருமந்:1815/1,2

ஆராவமுது அளித்து ஆனந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்றினில் - திருமந்:1815/2,3

அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே - திருமந்:1817/3,4

பெருந்தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி - திருமந்:1844/1

ஆகின்ற நந்தி அடி தாமரை பற்றி - திருமந்:1847/1

நச்சு-மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே - திருமந்:1850/4

எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே - திருமந்:1858/4

சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட - திருமந்:1863/1

பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை - திருமந்:1863/2

பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே - திருமந்:1863/4

தலை மிசை வானவர் தாள் சடை நந்தி
மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய - திருமந்:1878/1,2

மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய - திருமந்:1892/3

அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி
இது வித்திலே உள ஆற்றை உணரார் - திருமந்:1931/1,2

கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன் - திருமந்:1985/2

செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று - திருமந்:1996/3

ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் - திருமந்:2020/2,3

முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே - திருமந்:2047/4

பெரும் வழியா நந்தி பேசும் வழியை - திருமந்:2056/3

அ தன்மை ஆதல் போல் நந்தி அருள் தர - திருமந்:2075/3

காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் - திருமந்:2175/3

அறிகின்றாய் நீ என்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்துகொண்டேனே - திருமந்:2181/3,4

ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே - திருமந்:2284/3

நந்தி பராவத்தை நாட சுடர் முனம் - திருமந்:2293/3

நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை - திருமந்:2301/2

ஆன மறையாதியாம் உரு நந்தி வந்து - திருமந்:2310/1

அறிகின்றாய் நீ என்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே - திருமந்:2323/3,4

திருவருளால் நந்தி செம்பொருள் ஆமே - திருமந்:2341/4

அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே - திருமந்:2357/2,3

வாசா மகோசர மா நந்தி தானே - திருமந்:2380/4

தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து - திருமந்:2384/2

நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே - திருமந்:2410/4

மதி தந்த ஆனந்த மா நந்தி காணும் - திருமந்:2413/3

பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே - திருமந்:2427/3,4

செம்பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே - திருமந்:2441/4

நந்தி அறிவும் நழுவில் அதீதமாம் - திருமந்:2443/1

நந்தி நனவாதி மூட்டும் அனாதியே - திருமந்:2443/4

அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா - திருமந்:2452/1,2

என்னை அறிய இசைவித்த என் நந்தி
என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்து - திருமந்:2457/1,2

செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே - திருமந்:2473/4

பணிவித்த பேர் நந்தி பாதம் பற்றாயே - திருமந்:2482/4

கைக்காரணம் என்ன தந்தனன் காண் நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக - திருமந்:2487/2,3

பதி எனும் நந்தி பதம் அது கூட - திருமந்:2497/2

கூடுவர் நந்தி அவனை குறித்து உடன் - திருமந்:2563/2

சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேரருள் - திருமந்:2577/3

அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா - திருமந்:2582/1,2

இருந்த என் நந்தி இதயத்து உளானே - திருமந்:2592/4

நந்தி இருந்தனன் நாம் அறியோமே - திருமந்:2594/4

உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர் நந்தி
பொய்செய் புலனெறி ஒன்பதும் ஆட்கொளின் - திருமந்:2603/2,3

ஆரி கடன் நந்தி ஆமார் அறிபவர் - திருமந்:2625/2

பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேரின்பத்து - திருமந்:2635/1

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து - திருமந்:2641/1

இ வழி நந்தி இயல்பு அது தானே - திருமந்:2644/4

ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன் - திருமந்:2658/1

ஊன்றிய நந்தி உயர் மோனத்தானே - திருமந்:2661/4

மருவி பிரிவு அறியா எங்கள் மா நந்தி
  உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும் - திருமந்:2665/1,2

நா வணங்கும்படி நந்தி அருள்செய்தான் - திருமந்:2674/2

செறிக்கின்ற நந்தி திருவெழுத்து ஓதும் - திருமந்:2706/2

ஆகின்ற நந்தி அடி கீழ் அடங்குமே - திருமந்:2738/4

நடந்தான் செயும் நந்தி நல் ஞான கூத்தன் - திருமந்:2741/3

ஆடிய நந்தி புறம் அகத்தானே - திருமந்:2781/4

சீய குரு நந்தி திரு அம்பலத்திலே - திருமந்:2802/1

அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி
நணுகிய மின் ஒளி சோதி வெளியை - திருமந்:2811/2,3

இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே - திருமந்:2813/4

பேண வல்லார்க்கு பிழைப்பு இலன் பேர் நந்தி
ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே - திருமந்:2823/3,4

செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே - திருமந்:2826/4

எனையும் எம் கோன் நந்தி தன் அருள் கூட்டி - திருமந்:2830/3

வித்தகன் நந்தி விதிவழி அல்லது - திருமந்:2847/3

பாடது நந்தி பரிசு அறிவார்க்கே - திருமந்:2852/4

கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது - திருமந்:2937/3

நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே - திருமந்:2947/1

நலம் இல்லை நந்தி ஞானத்தினாலே - திருமந்:2957/3

கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னை - திருமந்:2974/2

இது அறிவான் நந்தி எங்கள் பிரானே - திருமந்:3044/4

வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி - திருமந்:3047/1

சாம்பவி நந்தி-தன் அருள் பார்வையாம் - திருமந்:1894/1

நகார முதலாகும் நந்தி-தன் நாமமே - திருமந்:2699/4

பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி-தன்னை
பிதற்று ஒழியேன் பெருமை தவன் யானே - திருமந்:38/3,4

பிறப்புஇலி நாதனை பேர் நந்தி-தன்னை
சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி - திருமந்:86/1,2

பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி-தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் - திருமந்:94/1,2

பெருவடி வைத்து அந்த பேர் நந்தி-தன்னை
குரு வடிவில் கண்ட கோனை எம் கோவை - திருமந்:1597/2,3

தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே - திருமந்:1787/4

வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்கு
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும் - திருமந்:1824/1,2

வெள்ள கடல் உள் விரிசடை நந்திக்கு
உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு - திருமந்:1834/1,2

வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே - திருமந்:1852/4

சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே - திருமந்:2658/4

நந்திகள் நால்வர் சிவயோக மா முனி - திருமந்:67/2

நந்திய நாதமும் நாதத்தால் பேதமும் - திருமந்:1957/3

நந்திய அங்கியினாலே நயம் தெரித்து - திருமந்:1958/2

நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும் - திருமந்:2443/3

உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே - திருமந்:2285/4

அதிசுபன் ஆவன் நந்தான் நந்தியாமே - திருமந்:2307/4

கண்ணன் பிறப்பு_இலி காண் நந்தியாய் உள்ளே - திருமந்:763/1

மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர் - திருமந்:840/2

தெளிவை அறிந்து செழும் நந்தியாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே - திருமந்:839/3,4

பின் அன்பு உருக்கி பெருந்தகை நந்தியும்
தன் அன்பு எனக்கே தலைநின்றவாறே - திருமந்:274/3,4

அஞ்செழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம் - திருமந்:934/1,2

செ இயல்பு ஆக சிறந்தனன் நந்தியும்
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் - திருமந்:942/2,3

கன்றது ஆக கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே - திருமந்:948/3,4

காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும் - திருமந்:1793/1,2

நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்து எழு தாய் என வந்த பின் - திருமந்:2446/2,3

பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவான் என் விழித்தானே - திருமந்:2859/3,4

கள்ள தலைவன் கமழ் சடை நந்தியும்
வள்ளல் பெருமை வழக்கம் செய்வார்கள்-தம் - திருமந்:3016/2,3

நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே - திருமந்:89/4

அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே - திருமந்:1608/4

என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே - திருமந்:1609/4

காணாய் என வந்து காட்டினன் நந்தியே - திருமந்:1610/4

கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே - திருமந்:1778/4

நனவில் துரியம் அதீதத்து நந்தியே - திருமந்:2202/4

அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே - திருமந்:2361/4

அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே - திருமந்:2456/4

நந்தியை நாளும் வணங்கப்படும் அவர் - திருமந்:27/3

ஆன் நின்று அழைக்கும் அது போல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே - திருமந்:30/3,4

அப்பனை நந்தியை ஆரா அமுதினை - திருமந்:36/1

நானும் நின்று ஏத்துவன் நாள்-தொறும் நந்தியை
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன் - திருமந்:37/1,2

போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை
போதம் தனில் வைத்து புண்ணியர் ஆயினார் - திருமந்:142/1,2

பாய்ந்து அற்ற கங்கை படர் சடை நந்தியை
ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே - திருமந்:179/3,4

வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர் - திருமந்:190/2,3

ஓம் என்று எழுப்பி தன் உத்தம நந்தியை
நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை - திருமந்:944/1,2

மவ் என்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே - திருமந்:953/3,4

நந்தியை மூலத்தே நாடி பரையொடும் - திருமந்:978/3

நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து - திருமந்:985/2

கந்த மலரில் கலக்கின்ற நந்தியை
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் - திருமந்:1460/2,3

உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய் - திருமந்:1559/2,3

முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே - திருமந்:1637/4

நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியை
தேடுவன் தேடி சிவபெருமான் என்று - திருமந்:1654/1,2

நாடு-மின் நந்தியை நம் பெருமான்-தன்னை - திருமந்:1679/3

நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி - திருமந்:1765/2,3

மேவி திரியும் விரிசடை நந்தியை
கூவி கருதி கொடுபோய் சிவத்திடை - திருமந்:1842/2,3

நந்தியை பூசிக்க நல் பூசை ஆமே - திருமந்:1853/4

நடக்கின்ற நந்தியை நாள்-தோறும் உன்னில் - திருமந்:2039/1

காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை
தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள் - திருமந்:2071/2,3

பாசம் செய்தானை படர் சடை நந்தியை
நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும் - திருமந்:2408/1,2

நேடிக்கொண்டு என்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடு புக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை - திருமந்:2522/1,2

காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை
தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள் - திருமந்:2550/2,3

கைகலந்தானை கருத்தினுள் நந்தியை
மெய்கலந்தான்-தன்னை வேதமுதல்வனை - திருமந்:2604/1,2

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை
கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை - திருமந்:2605/1,2

கந்த மலரில் கலக்கின்ற நந்தியை
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் - திருமந்:2622/2,3

நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் - திருமந்:2629/3

உறுதுணை நந்தியை உம்பர் பிரானை - திருமந்:2630/1

நன்மை வல்லோனை நடுவு உறை நந்தியை
புன்மை பொய்யாதே புனிதனை நாடு-மின் - திருமந்:2642/2,3

வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன் - திருமந்:2658/2

காயன நந்தியை காண என் கண் பெற்றேன் - திருமந்:2658/3

நந்தியை எந்தையை ஞான தலைவனை - திருமந்:2801/1

நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை
பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே - திருமந்:2849/3,4

கண்டு அறிவார் இல்லை காயத்தின் நந்தியை
எண்திசையோரும் இறைவன் என்று ஏத்துவர் - திருமந்:2942/1,2

நானாவிதம் செய்து நாடு-மின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம் - திருமந்:2989/1,2


நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி - வில்லி:12 81/1

என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி - வில்லி:12 82/1

நாடினார் பலர் நந்தியாவர்த்த நாள்மாலை - வில்லி:22 46/3

நந்தியும் உரைசெய கேட்டு நன்று என - வில்லி:41 208/3

நகரம் கூஉம் நாற்றம் நந்தி
பல் ஆ படு நிரை பயம்படு வாழ்க்கை - உஞ்ஞை:49/122,123

கண் அகன் புணர்ப்பில் கவின் பெற நந்தி
விண்ணகம் விளங்கு மேதகு நாட்டத்த - இலாவாண:2/11,12

நந்தி வட்டமும் இடையிடை வலந்த - இலாவாண:3/32

குஞ்சர முகமே நந்தி மலரவை - இலாவாண:4/77

நாளினும்நாளினும் நந்தி வனப்பு எய்தி - நரவாண:1/169

நரவாண தத்தன் நாள்-தொறும் நந்தி
உலம் பொரு மார்பின் உதயணகுமரன் - நரவாண:8/31,32

நறையும் நந்தியும் அறை பயில் அகிலும் - இலாவாண:12/15

நல் சினை நறவமும் நாகமும் நந்தியும்
பருவம் அன்றியும் பயன்கொடுப்பு அறாஅ - இலாவாண:20/60,61

நந்திவட்டமும் நாகத்து அலரும் - இலாவாண:15/103

நந்தியாவட்டம்
நந்தியாவட்டம்
நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான் - 1.திருமலை:1 10/4

நங்கள் நாதனாம் நந்தி தவம் செய்து - 1.திருமலை:1 35/1

துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரம் வீரம் மிடைந்த - 1.திருமலை:5 94/3

பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசை போந்தே - 4.மும்மை:5 21/2

நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக - 5.திருநின்ற:1 378/4

நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட - 6.வம்பறா:1 159/1

நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் - 6.வம்பறா:1 301/2

நந்தி பிரானார் வந்து அருள்செய்ய நலம் எய்தும் - 6.வம்பறா:2 373/1

நந்தி திருவருள் பெற்ற நான்_மறை யோகிகள் ஒருவர் - 6.வம்பறா:3 1/4

நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே - 11.பத்தராய்:6 5/4


நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி - திருப்:424/11

ஓது வேத சர சத்தி அடியுற்ற திரு நந்தியூடே - திருப்:1313/6
நந்தி
நந்தி
நந்தி மிஞ்சிய விலங்கு இனம் கொடுகி மெய் நடுங்கும் - சீறா:25/4

நந்தி அத்திரி பரி யாவும் நன்கு உற - சீறா:753/2

நந்தி இ உரை பகர்ந்திட நரபதி உமறு - சீறா:1528/1

சிந்தி நந்தி விழுந்தன தீ என - சீறா:4502/2

பரிகள் ஒட்டகம் சுமை பரித்த நந்திகள்
அரிதினில் குடித்து அரும் அயாவும் தீர்ந்தன - சீறா:3293/1,2

தீது இலாத பாடலங்களும் நந்தியும் தெரியா - சீறா:4604/3
நந்தியாவட்டம்
நந்தியாவட்டம்
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று - மது:22/19

நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி - சிந்தா:4 943/1

நந்தியாவட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின் - சிந்தா:5 1287/2

நலம் கவின் கொண்ட காவு நல் ஒளி நந்திற்று அன்றே - சிந்தா:13 2710/4

நாள்தொறும் நாள்தொறும் நந்தி உயர்வு எய்தி - வளையா:56/3

நந்தி அம் பதியிடை நாதன் பாதுகம் - அயோ:14 138/1

நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் - யுத்1:2 106/1

சிங்கல்இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த - கிட்:13 40/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *