Skip to content
நரந்தம்

நரந்தம் என்பது நாரத்தை மரம்

1. சொல் பொருள்

(பெ) 1. நாரத்தை, 2. கஸ்தூரி, 3. ஒரு வாசனைப் புல்,

2. சொல் பொருள் விளக்கம்

ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த பழம்; நாரத்தை.

நாரத்தை, நரந்தம் வாசனை திரவியங்களுக்காகவம், அதன் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் நரந்தங்காயை ஊறுகாயாக செய்து சாப்பிடுகின்றனர்.

  • நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர்
  • காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும்.
  • நரந்தம்பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம்.
  • காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

bitter orange, citrus aurantium, citrus medica, musk, a fragrant grass, Cymbopogon citratus, lemon grass

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94

நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக – மது 553

கத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் – பொரு 238

நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்

நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே - பரி 16/15

நரந்த நறும் பூ நாள்மலர் உதிர - அகம் 141/26

நரந்த பல் காழ் கோதை சுற்றிய - புறம் 302/4

நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக - மது 553

நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி - குறி 94

நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் - குறு 52/3

பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் - பதி 11/22

நளி இரும் சோலை நரந்தம் தாஅய் - பரி 7/11

நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி - கலி 54/5

நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் - அகம் 266/4

நரந்தம் நாறும் தன் கையால் - புறம் 235/8

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் - பொரு 238

நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி - புறம் 132/4
நரந்தம்
நரந்தம்பூ
நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும் - 1.திருமலை:2 28/1

நாக சூத வகுளம் சரளம் சூழ் நாளிகேரம் இவங்கம் நரந்தம்
பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி - 1.திருமலை:5 93/1,2

நரந்தம் குலவி மரவ மலர் நறும் தேன் குளிக்கும் புய வரையோடு - சீறா:1591/1

குருந்தும் வெட்சியும் நரந்தையும் நறவும் - இலாவாண:12/19

நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் - மணி:3/162

நாகம் நாறு நரந்தை நிரந்தன - மது:12/75

நரந்த நறை குழல் நங்கையும் நாமும் - பால:13 29/3

நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி - கிட்:3 30/3

நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம் - பால:1 13/2

விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து - சுந்:2 161/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *