Skip to content

சொல் பொருள்

(வி) 1. வறுமைப்படு, 2. மெலிந்திரு, 3. வலிமை குன்றியிரு, 4. துன்புறு,  5. மெல்லியதாயிரு, 6. வறண்டிரு,

சொல் பொருள் விளக்கம்

வறுமைப்படு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be poor, be thin, become fatigued, be afflicted, be soft, be dry

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள் – நற் 90/9

வறுமைகொண்ட பெண்ணைப்போன்று ஒருசில வளையல்களைக் கொண்ட இளையவளான பரத்தை

நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள் – நற் 93/8

மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின்

பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும்
வால் உளை பொலிந்த புரவி – நற் 135/6-8

பல காடுகளைக் கடந்த வருத்தத்தினால் வலிகுன்றிய ஓட்டத்தையுடைய,
முழங்குகின்ற கடல் அலைகள் ஒதுக்கிய புது மணலில் அழுந்தியதால் சுழலும்
வெண்மையான தலையாட்டம் பொலிந்த புரவி

நலன் உணப்பட்ட நல்கூர் பேடை – நற் 178/3

இன்பம் நுகரப்பெற்றுக் கைவிடப்பட்ட துயரத்தையுடைய பேடை

ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/4-6

வாடைக்காற்றினால் தூறல்போடும் குளிர்நிறைந்த நள்ளிரவில்
பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை.

மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1

நீர் பெருகும் சுனைகள் வற்றிப்போன வறண்ட பாலை நிலத்தின் தொடக்கத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *