Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தினம், 2. காலை, 3. நேரம், 4. பகல், 5. அன்றைய நாளுக்குரியது,  6. முற்பகல், 7. வாழ்நாள்

சொல் பொருள் விளக்கம்

1. தினம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a day consisting of 24 hours, early morning, time, daytime, that belonging to that day, forenoon, lifetime

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் – நற் 129/2

ஒரு தினம் நம்மைவிட்டுப் பிரிந்திருந்தாலும் உயிரின் தன்மை வேறுபடும்

நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி – சிறு 23

செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் (அன்றைய)காலை பூத்த மலர் (என நினைத்து)விரும்பி

அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 111,112

நடுயாமத்து வேட்டையைச் செய்யாதுவிட்டால், பகற்பொழுதில்
பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,

நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 695

நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும்

நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68

(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல

வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 76

நிற்காமல் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு)

வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி
விண்டு சேர்ந்த வெண் மழை போல
சென்றாலியரோ பெரும
———————————————–
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளே – பதி 55/14- 21

– நீ வேண்டும் கால அளவுக்கு, ஆண்டுகள் பல கழிய,
மழையைப் பெய்து உலகைக் காத்த பின்பு, பஞ்சுப் பிசிறுகளாய்ப் பொங்கி மேலெழுந்து,
மலை உச்சியை அடையும் வெண் மேகத்தைப் போல,
சென்று கெடாமல் இருப்பதாக, பெருமானே!
—————————————————————————-
எழுச்சிமிக்க உள்ளத்தினையும் கொண்ட வேந்தனே! உனது வாழ்நாள் –

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *