Skip to content
நீழல்

நீழல் என்பதன் பொருள்ஒளிமறைவு;ஒளிமறைப்பினால் ஏற்படும் உருவம், பிம்பம்;பிரதி பிம்பம்;அருள்;எவ்வி என்ற மன்னனின் ஊர், நிழல் என்பதன் வேறு வடிவம்.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. பார்க்க : நிழல்-(பெ)

  1. நிழல் என்பதன் வேறு வடிவம்.

2. ஒளி, ஒளிமறைவு, ஒளிமறைப்பினால் ஏற்படும் உருவம், பிம்பம்,

3. பிரதி பிம்பம்,

4. அருள், 

5. எவ்வி என்ற மன்னனின் ஊர், 

6. காற்று

7. நோய்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

shade, shadow, reflection, Light, wind, Disease, brightness, grace, favour, benignity, a city belonging to the monarch Evvi.

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் - குறள் 1034

நெல்வளம்‌ உடைய தண்ணளி பொருந்திய உழவர்‌, பல அரசரின்‌ குடைநிழல்களையும்‌ தம்‌ குடையின்‌ கீழ்‌ காணவல்லவர்‌ ஆவர்‌.

பைம் கறி நிவந்த பலவின் நீழல் – சிறு 43

பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்

கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி – புறம் 260/5

கள்ளி மரத்தின் நிழலில் உள்ள தெய்வத்தை ஏத்தி

புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/3-5

துளையுள்ள தாளையுடைய ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் கதிர் போலும் கோட்டையுடைய நத்தையி சுரி முகத்தையுடைய ஏற்றை நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தின் மணம் கூடும்

பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல்
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல – கலி 78/4-6

பண்பட்ட நல்ல நாட்டில் பகைவரின் படை நுழைந்ததாக, அந்நாட்டைக் கைவிட்டு அகன்றுபோய் தம்மைக் காக்கின்றவனுடைய ஆட்சியின் அருளையுடைய வேற்று நாட்டில் குடியேறி வசிக்கும் குடிமக்களைப் போல

பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன – அகம் 366/12

பொன்னாலான பூண் அணிந்த எவ்வி என்பானது நீழல் என்னும் ஊர் போன்ற

துறைகெழு கொண்கநீ நல்கின் 
நிறைபடு நீழல் பிறவுமா ருளவே. நற்.172

நீ இவளை அணைந்து நல்குவையோ? நல்குவையாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவும் ஈங்குள்ளனகாண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும்

நீழல் முன்றில் நில உரல் பெய்து - பெரும் 96

பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி - பெரும் 232,233

சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து - மது 277,278

பல் வேறு உருவின் பதாகை நீழல்
செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின் - பட் 182,183

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து - நற் 3/2,3

ஆல நீழல் அசைவு நீக்கி - நற் 76/3

பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு - நற் 119/8

பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ - நற் 352/8

பெரு வரை நீழல் உகளும் நாடன் - குறு 187/3

இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்
புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன் - குறு 299/3,4

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும் - கலி 9/1,2

நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி தம் - கலி 26/15

புல் அரை இத்தி புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை - அகம் 77/13,14

பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை பொருந்தி செல்லுநர்க்கு - அகம் 151/11,12

பொத்து உடை மரத்த புகர் படு நீழல்
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் - அகம் 277/10,11

காஞ்சி நீழல் தமர் வளம் பாடி - அகம் 286/4

காஞ்சி நீழல் குரவை அயரும் - அகம் 336/9

கள்ளி நீழல் கதறு வதிய - அகம் 337/17

இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார் - அகம் 343/11

அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே - அகம் 345/21

அகல் இலை புன்னை புகர் இல் நீழல்
பகலே எம்மொடு ஆடி இரவே - அகம் 370/3,4

உழை புறத்து அன்ன புள்ளி நீழல்
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள் - அகம் 379/20,21

உள் ஆற்று கவலை புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள - புறம் 219/1,2

பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என - புறம் 320/2,3

அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் - புறம் 325/11,12

காடி வெள் உலை கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி - புறம் 399/3,4

புன்னை நீழல் புது மணல் பரப்பில் - சிலப்.புகார் 6/168

புன்னை நீழல் புலவு திரைவாய் - சிலப்.புகார் 7/105

பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல்
இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை - சிலப்.புகார் 7/230,231

குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி - சிலப்.புகார் 9/26

அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி - சிலப்.புகார் 10/12

பசும் கொடி படாகை பந்தர் நீழல்
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி - சிலப்.மது 14/216,217

வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து - சிலப்.வஞ்சி 26/72

பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் - சிலப்.வஞ்சி 29/178

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.