சொல் பொருள்
முருகன், பெரிய வேளிர்குலத்தான்
சொல் பொருள் விளக்கம்
முருகன், பெரிய வேளிர்குலத்தான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Muruga, magnificent king belonging to the vELir tribe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75 கடம்பிடத்தே இருந்த நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்; முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15 முழவினை ஒத்த வலிய தோளினையுடைய பெரிய வேளாகிய ஆவி என்பானின் நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4 புகழ்பெற்ற வேளிர் குடியிற் பிறந்த ஆதன் என்பானின் போந்தை என்னும் ஊரைப் போன்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்