Skip to content

சொல் பொருள்

நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு,

சொல் பொருள் விளக்கம்

நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Food for elephants and horses, rolled into balls after mixing it with ghee
and trampling it with foot;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ – புறம் 44/1,2

கரிய பெண்யானையின் கூட்டத்தோடு, பெரிய கயத்தின்கண் படியாதனவாய்
நெல்லையுடைய கவளத்துடனே நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளமும் பெறாமல்

நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்
தண் நடை மன்னர் தாருடை புரவி – புறம் 299/4,5

நெய் பெய்து மிதித்து அமைத்த உணவை உண்ட ஒழுங்குறக் கத்திரிக்கப்பட்ட பிடரியினையுடைய
மருத நிலத்து ஊர்களையுடைய பெருவேந்தரின் தார் அணிந்த குதிரைகள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *