சொல் பொருள்
சுருண்டிரு, அலையலையாகு, பூவின் புறவிதழை ஒடி, செறிந்திரு, செறித்துவை, வளைவு, சுருள், பாதை, கோட்பாடு, ஒழுக்கநியதி, வழிமுறை, நல்லொழுக்கம்,
சொல் பொருள் விளக்கம்
சுருண்டிரு, அலையலையாகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be curly, wavy as one's hair, strip a flower of its calyx, be dense, pack closely, curl, way, path, road, principle, code of conduct, means, method, path of virtue, righteousness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறல் என நெறிந்த கூந்தல் – அகம் 213/23 கருமணல் போல் நெளிநெளியாக வளைந்த கூந்தலையும் வயங்கு ஒளி நிழல்_பால் அறலின் நெறித்த கூந்தல் – அகம் 265/7,8 விளங்கும் ஒளி வாய்ந்த நிழற்கண்ணுள்ள அறல் போல நெளிந்த கூந்தலினையும் நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் – கலி 143/31,32 நெய்தல் பூவின் புறவிதழை நீக்கி மாலை கட்டுவதில் அவன் வல்லவன், நீண்ட மென்மையான தோள்களின் மேல் எய்யக்கூடிய கரும்புவில்லை எழுதுவதிலும் அவன் வல்லவன் விசும்பு உற நிவந்த மா தாள் இகணை பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/1,2 வானளாவ உயர்ந்த கரிய அடியினையுடைய இகணை மரத்தின் பசிய நிறமுடைய மெல்லிய இலைகளை நெருங்கச் செறித்து வைத்தாற்போன்ற குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் – பெரும் 162 குறிதாகிய சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள் வரை சேர் சிறு நெறி வாராதீமே – நற் 336/11 மலையை அடுத்த சிறிய வழியில் வராமலிருப்பீராக! அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500 அறக்கோட்பாடுகளினின்றும் தவறாது, நல்வழியே நடந்து அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே கோடி யாத்து நாடு பெரிது நந்தும் – புறம் 184/5,6 அறிவுடைய அரசன் இறைகொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்ளின் கோடிப் பொருளினை ஈட்டிக்கொடுத்து அவன் நாடு மிகவும் தழைக்கும் அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து – புறம் 224/4 அறத்தைத் தெளிய உணர்ந்த ஒழுக்கம் மாட்சிமைப்பட்ட அவைக்களத்தின்கண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்