Skip to content
நொச்சி

நொச்சி ஒரு சிறு மரம்

சொல் பொருள்

ஒரு சிறு மரம்

சொல் பொருள் விளக்கம்

இது இன்றைக்கும் காட்டுநிலங்களின் வேலியோரம் வளர்ந்திருக்கும். சங்ககாலத்தில் இது வீடுகளில் வளர்க்கப்பட்டது. நொச்சியில் (Vitex negundo) வெண்ணொச்சிகருநொச்சிநீலநொச்சிநீர்நொச்சிமயிலடி நொச்சி ஆகிய வகைகள் உள்ளன

கருநொச்சி
கருநொச்சி
வெண்ணொச்சி
வெண்ணொச்சி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Vitex negundo

a multi-leaved chaste tree

நீர் நொச்சி
நீர் நொச்சி
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மனை நொச்சி நிழல் ஆங்கண் – பொரு 185

மனை மா நொச்சி மீமிசை மா சினை – நற் 246/3

மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1

மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – அகம் 367/4

இதன் இலைகள் முன்பகுதியில் மூன்று பிரிவாகப் பிரிந்திருப்பதால் இது மயிலின் கால்களைப்போன்றது
என்று புலவர்களால் பாடப்பெற்றுள்ளது.

மயில் அடி இலைய மா குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/5,6

மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த – குறு 138/3,4

மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற – நற் 305/2,3

நொச்சிப்பூவைக் குயவர்கள் சூடிக்கொள்வர்.

ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/2-4

ஒளிவிடும் கொத்தினைக் கொண்ட நொச்சி மாலையைச் சூடிக்கொண்டு
ஆறு நீளக் கிடந்ததைப் போன்ற அகன்ற நெடிய தெருவில்
திருவிழா பற்றிய செய்திகளைக் கூறும் முதுமை வாய்க்கபெற்ற குயவனே!

மணி குரல் நொச்சி தெரியல் சூடி
பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/1,2

நீலமணி போன்ற பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் பூமாலையைச் சூடிக்கொண்டு
பலியாக இடப்பட்ட கள்ளைக் குடிக்கும் இந் நிலத்து முதுகுடியைச் சேர்ந்த குயவன்

நொச்சியின் அரும்புகள் நண்டுக்கண்களைப் போல் இருக்கும் என்பர்.

நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி – நற் 267/1,2

நொச்சியின் கரிய மொட்டுக்களைப் போன்ற கண்களையுடைய
மணல்மேட்டு நண்டின் பெரிய சுற்றத்தோடு கூடிய கூட்டம்,

நொச்சியின் பூக்கள் மணிகளைக் கொத்துக்கொத்தாய்க் கட்டித் தொங்கவிட்டதைப் போல் இருக்கும் என்பர்.

மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி – புறம் 272/1

மணிகள் கொத்துக்கொத்தாய் அமைந்தாற்போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சி

நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் - தேவா-சம்:1591/1

நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் - தேவா-சுந்:997/3

நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் - தேவா-சம்:1591/1

திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ - 4.மும்மை:5 86/3

பற்றும் துறை நொச்சி பரிந்து உடைய - 8.பொய்:2 28/3

அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் - திருப்:1166/15

துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் - திருப்:1252/1

அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன் - பொருள். புறத்:13/5

உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி - புகார்:10/242

நொச்சி மா மலர் நிறத்தன நொடி வரும் முந்நீர் - சிந்தா:10 2163/1

உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் - யுத்1:13 12/4

மனை நொச்சி நிழல் ஆங்கண் - பொரு 185

மயில் அடி இலைய மா குரல் நொச்சி/மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற் 115/5,6

ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி - நற் 200/2

மனை மா நொச்சி மீமிசை மா சினை - நற் 246/3

நொச்சி மா அரும்பு அன்ன கண்ண - நற் 267/1

மணி குரல் நொச்சி தெரியல் சூடி - நற் 293/1

மயில் அடி இலைய மா குரல் நொச்சி/அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த - குறு 138/3,4

கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி/பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக - கலி  46/12,13

மனை இள நொச்சி மௌவல் வால் முகை - அகம் 21/1

தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் - அகம் 23/11

நொச்சி வேலி தித்தன் உறந்தை - அகம் 122/21

தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ - அகம் 165/10

நுனை குழைத்து அலமரும் நொச்சி/மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே - அகம் 203/17,18

நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் - அகம் 259/14

கூழை நொச்சி கீழது என் மகள் - அகம் 275/17

மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய - அகம் 367/4

கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை - புறம் 271/2

மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி/போது விரி பன் மரனுள்ளும் சிறந்த - புறம் 272/1,2

ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் - நற் 143/3

மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே - நற் 184/9

மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்/கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற - நற் 305/2,3

மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும்/அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் - அகம் 117/1,2

கரும் குரல் நொச்சி பசும் தழை சூடி - கார்40:39/2
காட்டு நொச்சி
காட்டு நொச்சி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *