சொல் பொருள்
நத்தை
நொள்ளை – குருடு
சொல் பொருள் விளக்கம்
கண்பார்வை இல்லாமை நொள்ளை எனப்படுகின்றது. நொள்ளைக் கண் என்பது குருட்டுக் கண்ணாம் ‘இல்லை என்று சொன்னாலும், ‘சின்னபிள்ளை’ என்று சொன்னாலும் ‘என்ன நொள்ளை’ என்றும், ‘சின்ன நொள்ளை’ என்றும் எதிரிட்டுரைப்பது வழக்கு. நொள்குதல், ஒழுகுதல், குறைதல் பொருளது. இது நொள்ளையென மாறி இல்லாமைப் பொருள் தருவதாயிற்றாம். “நொள்ளை விழிக்கொரு நோன்புண்ணும் வந்தாற்போல்” என்பதோர் உவமையாட்சி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
snail
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் – அகம் 53/8,9 உள்ளிருக்கும் ஊன் வாடப்பெற்ற சுரிந்த மூக்கினையுடைய நத்தைகள் பொரியரையுடையது போலாக மூடிக்கொண்டிருக்கும் தனிமைகொண்ட நெறியில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்