Skip to content
பகன்றை

பகன்றை(க்) கொடி கொழுகொழுப்பாகச் செந்நிறம் கொண்டிருக்கும்.

1. சொல் பொருள்

(பெ) ஒரு கொடி வகை, அதன் மலர், சிவல், சிவலை, சிவதை, கிலுகிலுப்பை?

2. சொல் பொருள் விளக்கம்

  1. இது படரும் தன்மையது எனப்படுவதால், இது ஒரு கொடி வகை எனப் பெறப்படும்.
  2. இது வயலில் காணப்படும் என்பதால் இது ஒரு நீர்த்தாவரமாகும்.
  3. இதனை மகளிர் மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்
  4. இது வட்டவடிவமாக இருக்கும்.
  5. இது முன்பனிக்காலத்தில் மலரும்.
  6. இதன் இலை பெரியது, இதன் மலர் பொதியை அவிழ்த்தது போன்று இருக்கும். மேலும் இதன் மலர் வெண்மையாக இருக்கும்.
  7. இதன் பூ குறைந்த அளவு மணத்தைக் கொண்டு கள் போல் மணக்கும்.
  8. பகன்றைக்கொடி சிவப்பாக இருக்கும்
பகன்றை
பகன்றை

மொழிபெயர்ப்புகள்

EnglishSt. Thomas lidpod বাংলা: দুধকলমি हिन्दी: निसोथ മലയാളം: ത്രികോൽപ്പക്കൊന്ന မြန်မာဘာသာ: ကြံဟင်း తెలుగు: తెగడ Tiếng Việt: Bìm nắp 中文: 盒果藤 中文(简体): 盒果藤 中文(繁體): 盒果藤 中文(香港): 盒果藤 中文(臺灣): 盒果藤

3. ஆங்கிலம்

indian jalap, Ipomaea turpethum, operculina turpethum, Silva Monso., Crotalaria verrucosa, St. Thomas lidpod

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பகன்றை
பகன்றை
1. இது படரும் தன்மையது எனப்படுவதால், இது ஒரு கொடி வகை எனப் பெறப்படும்.

வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 195

நீரற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும், படர்கின்ற பகன்றையினையும்,

2.இது வயலில் காணப்படும் என்பதால் இது ஒரு நீர்த்தாவரமாகும்.

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி – மது 261

தழைத்த பகன்றையின் (நெல்)முற்றிய வயல்களில்

3.இதனை மகளிர் மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்

பகன்றை கண்ணி பழையர் மகளிர் – மலை 459

பகன்றைப்பூ மாலை(சூடிய) கள்விற்கும் பழையர்வீட்டுப் பெண்கள்,

4.இது வட்டவடிவமாக இருக்கும்.

பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் – நற் 86/3

பாண்டில் போன்று வட்டமான, பகன்றை மலர்கின்ற

பகல் மதி உருவின் பகன்றை மா மலர் – ஐங் 456/2

பகலில் காணப்படும் மதியின் தோற்றத்தில் உள்ள பகன்றையின் பெரிய மலர்கள்

5.இது முன்பனிக்காலத்தில் மலரும்.

பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் – நற் 86/3,4

பாண்டில் போன்று வெள்ளை வட்டமான, பகன்றை மலர்கின்ற
கடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில்

6. இதன் இலை பெரியது, இதன் மலர் பொதியை அவிழ்த்தது போன்று இருக்கும்.
மேலும் இதன் மலர் வெண்மையாக இருக்கும்.

பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/4

பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்

7.இதன் பூ குறைந்த அளவு மணத்தைக் கொண்டு கள் போல் மணக்கும்.

பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும் – குறு 330/4,5

பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்
இனிமையும், கடுப்பையும் உடைய கள்ளைப் போன்று மணமின்றிக் கமழும்

8.கோவலரும் இதனை மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்.

பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் – ஐங் 87/1

பகன்றைப்பூ மாலையைத் தலையில் சூடியவரும், பல பசுக்களை மேய்ப்பவருமான கோவலர்கள்

9.மலர்வதற்கு முன்னர், இது சுரித்த தன்மையுடன் மொட்டாக இருக்கும்.

தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/3

கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்
சிவதை
சிவதை
வறள் அடும்பின் இவர் பகன்றை/தளிர் புன்கின் தாழ் காவின் - பொரு 195,196

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி - மது 261

பகன்றை பலாசம் பல் பூ பிண்டி - குறி 88

பகன்றை கண்ணி பழையர் மகளிர் - மலை 459

பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் - நற் 86/3

பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ - குறு 330/4

பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் - ஐங் 87/1

பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டை - ஐங் 97/1

பகல் மதி உருவின் பகன்றை மா மலர் - ஐங் 456/2

பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் - பதி 76/12

பகன்றை பூ உற நீண்ட பாசடை தாமரை - கலி 73/2

தளை பிணி அவிழா சுரி முக பகன்றை/சிதரல் அம் துவலை தூவலின் மலரும் - அகம் 24/3,4

ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல் - அகம் 176/10

பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை/நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய - அகம் 217/6,7

பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல் - அகம் 219/4

இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை/கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய - அகம் 243/3,4

சிவலை
சிவலை
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை/பெரு வளம் மலர அல்லி தீண்டி - அகம் 255/11,12

குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர் - அகம் 316/6

பனி பகன்றை கனி பாகல் - புறம் 16/14

பனி துறை பகன்றை நறை கொள் மா மலர் - புறம் 235/18

போது விரி பகன்றை புது மலர் அன்ன - புறம் 393/17

பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ - அகம் 156/5
கிலுகிலுப்பை
கிலுகிலுப்பை
குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த - மது: 13/157,158

பகன்றையும் பலாசும் அகன் தலை புழகும் - இலாவாண:12/27

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *