Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சட்டை, 2. புடவை,

சொல் பொருள் விளக்கம்

1. சட்டை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

coat, jacket, saree

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69

பாதங்களை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து

உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக – முல் 65,66

உடம்பை ஆட்டிப் பேசும், (வாய்)பேசாத நாவினையுடைய (ஊமைகள்)
சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக
பார்க்க : மிலேச்சர்

படம் செய் பந்தர் கல் மிசையதுவே – புறம் 260/28

புடவையால் செய்யப்பட்ட பந்தலின் கீழ் நட்ட கல்லின் மேலது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *