Skip to content

பழிபாவம்

சொல் பொருள்

பழி – பொருந்தாச் செயல் செய்தலால் இம்மையில் உண்டாகும் பழிப்பு.
பாவம் – தீவினை செய்தலால் மறுமையில் உண்டாகும் தீயநிகழ்வு.

சொல் பொருள் விளக்கம்

பழி-வசைச்சொல்; பழியஞ்சித்தேடிப் பகுத்துண்ண வேண்டும் என்பார் வள்ளுவர். ‘பழியோரிடம் பாவமோரிடம்’ என்பதில் பழி என்பது பழிக்கு ஆளாம் குற்றத்தைக் குறித்தது. பாவம் என்பது தண்டனையைக் குறித்தது. பாவம்-அகன்றது; அகன்று செல்வது என்னும் பொருளது. ஒன்றைத் தொட்டு ஒன்றாக விரிந்து கொண்டே வரும் தீவினைகளை இயற்றுவது பாவமாகும். முன்னதிற் பின்னது கொடுமை மிக்கது என்பது கருதுக.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *