Skip to content

பள்ளம் நொடி

சொல் பொருள்

பள்ளம் – ஆழமும் அகலமுமாக அமைந்த குழி
நொடி – மேடும் தணிவுமாக அமைந்த வழி

சொல் பொருள் விளக்கம்

பள்ளம் நொடி பார்த்து வண்டியை நடத்துமாறு சொல்வது வழக்கு. பள்ளத்தில் வண்டி இறங்கினால் ஏறுதற்கு இடர்; நொடியில் ஓட்டினால் தூக்கித் தூக்கி அடித்துத் தொல்லையுண்டாம். நொடிக்கு வறுமைப் பொருள் உண்மை “நோய் நொடி” என்பதில் காண்க. பள்ளம்-வயல் நிலம்; வயல் நிலத்து அல்லது மருத நிலத்து வாழ்வு பற்றி எழுந்த நூல் பள்ளுநூல்; பின்னே பள்ளு ‘பாடல்’ என்னும் பொருளில் வந்தது. ‘ ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்பது அது.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *