Skip to content

பற்று பாசம்

சொல் பொருள்

பற்று – நெருங்கி உறவாடி இருத்தல்.
பாசம் – பிரிவின்றி இணைந்திருத்தல்.

சொல் பொருள் விளக்கம்

“பற்று பாசம் இல்லாத மக்களென்ன மக்கள்’ என்று முதியோர் தம் மக்களைச் சலித்துக் கொள்வது தெரிந்த செய்தி. பற்று – பற்றுதல் அல்லது இறுக்கிப் பிடித்தல் போல் அமைந்த நிலை. பாசம், ‘பசைபோல்’ ஒட்டிக் கொண்டு இரண்டற நிற்கும் நிலை. பற்றும் பாசமும் அறுதல் துறவுச் சிறப்பை துலக்குவது எனினும்; இல்லற அன்புக்கும் உலகியல் நலத்துக்கும் பற்றும் பாசமும் விரும்பக் கூடியனவாகவே உள்ளன. ஆதலால் பற்றறுத்தலை வள்ளுவர் துறவிலே வைத்தார். (குறள் அதி 35)

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *