Skip to content

பாக்கம் என்பது கடற்கரை சார்ந்த ஊர்

1. சொல் பொருள்

(பெ) 1. கடற்கரை சார்ந்த ஊர், 2. ஊர்

2. சொல் பொருள் விளக்கம்

1. கடற்கரை சார்ந்த ஊர்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

coastal village, village

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே – நற் 207/3,4

நிறைய மீன்களைக் கொள்பவர்கள் வசிக்கும் பாக்கம் முழுதும் ஆரவாரிக்க,
நெடிய தேரினைச் செய்துகொண்டு நம் காதலர் வருவது தடுக்கப்படமுடியாதது;

நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம்
விரி பூ கரும்பின் கழனி புல்லென – பதி 13/12,13

நீ வெகுண்டு முற்றுகையிட்டுத் தங்கிய, தம் சிறப்பு அழிக்கபெற்ற பேரூர்கள் –
விரிந்த பூக்களைக் கொண்ட கரும்பு வயல்கள் புல்லென்று தோன்ற,

துடி குடிஞை குடி பாக்கத்து/யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப - பொரு 210,211
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து/பல் மரம் நீள் இடை போகி நன் நகர் - பெரும் 367,368
கள் கொண்டி குடி பாக்கத்து/நல் கொற்கையோர் நசை பொருந - மது 137,138
கொழும் பல் குடி செழும் பாக்கத்து/குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு - பட் 27,28
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து/உவன் வரின் எவனோ பாண பேதை - நற் 127/2,3
சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரானே - நற் 169/10
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் - நற் 203/6
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து/இன்று நீ இவணை ஆகி எம்மொடு - நற் 215/7,8
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே - நற் 232/9
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் - குறு 339/3
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற - குறு 394/2
மணம் கமழ் பாக்கத்து பகுக்கும் - அகம் 10/12
இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்து/குறும் கண் அம் வலை பயம் பாராட்டி - அகம் 70/2,3
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து/இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட - அகம் 118/4,5
கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து/எல் விருந்து அயர ஏமத்து அல்கி - அகம் 187/12,13
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து/நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் - அகம் 196/1,2
அரு முனை பாக்கத்து அல்கி வைகுற - அகம் 245/13
புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து/இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் - அகம் 270/2,3
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து/வழங்கல் ஆனா பெரும் துறை - அகம் 338/19,20

ஓத நீர் வேலி உரை கடியா பாக்கத்தார்
   காதல் நீர் வாராமை கண் நோக்கி ஓத நீர் - திணை150:37/1,2

வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து - திணை150:49/4

பாக்கம் இது எம் இடம்	 - ஐந்50:12/4
விரை மேவும் பாக்கம் விளக்கா கரை மேல் - திணை150:48/2


சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி - மலை 162
பெரும் கழி பாக்கம் கல்லென - நற் 111/9
சில் குடி பாக்கம் கல்லென - நற் 159/11
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென - நற் 207/3
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே - நற் 303/2
நல்லோள் தந்தை சிறுகுடி பாக்கம்/புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த - நற் 323/6,7
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம்/விரி பூ கரும்பின் கழனி புல்லென - பதி 13/12,13
பாடுவார் பாக்கம் கொண்டு என - பரி 7/31

துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி - நற் 101/5
பெரும் தண் நிலைய பாக்கமும் உடைத்தே - ஐங் 439/3


பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் - 6.வம்பறா:1 1013/2
வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம்
   கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார் - 6.வம்பறா:2 278/3,4

படிவ பள்ளியொடு பாக்கம் கவர்ந்து - உஞ்ஞை:51/64
பணிவு_இல் பாக்கம் பயம் கொண்டு கவரா - மகத:2/34

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை - புகார்:7/131

உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி - புகார்:7/135

பட்டின பாக்கம் விட்டனர் நீங்கா - புகார்:10/159

மறு இன்றி விளங்கும் மருவூர் பாக்கமும்
   கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் - புகார்: 5/39,40
பாடல்_சால் சிறப்பின் பட்டின பாக்கமும்
   இரு பெரு வேந்தர் முனை_இடம் போல - புகார்: 5/58,59

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *