சொல் பொருள்
பாரம் – தாங்குவார்;
தூரம் – பழந் தொடர்பார்.
சொல் பொருள் விளக்கம்
‘பார தூரம் தெரியாதவன்’ என்பதொரு பழித் தொடர். நம் குடும்பத்தை இதுவரை தாங்கி உதவியவர் யார் என்பதைத் தெரிந்திருந்தால் அதற்கு ஏற்றபடி நன்றியோடு இருக்கத் தோன்றும். அது போல் நம் குடும்பத்திற்கும் இக் குடும்பத்திற்கும் உள்ள முன்பின் தொடர்புகளை அறிந்து கொண்டாலும் அதற்கு ஏற்றபடி உதவியாக வாழ்ந்து கொள்ளத் தோன்றும்? அவ்விரண்டும் அறியாதவனுக்கு என்ன தோன்றும் என்னும் வினாவில் பிறந்தது இப் பழித் தொடாரம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்