Skip to content

சொல் பொருள்

(வி) 1. கலைந்துகிட, 2. பரட்டையாயிரு, 3. கிழிபடு, 4. சிதறிக்கிட, 5. அழிந்துபோ

2. (பெ) 1. பருந்து, கழுகு, 2. கேடு, அழிவு

சொல் பொருள் விளக்கம்

1. கலைந்துகிட

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be in disorder, be unkempt, saggy, untidy, be torn into pieces, be scattered, be ruined, destroyed, kite, falcon, eagle, ruin, damage

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன்
புன் தலை பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே – நற் 151/10-12

ஆழமான நீரையுடைய நெடிய சுனையைப் பார்த்துத் தலையைக் கவிழ்த்துத் தன்
புல்லிய தலையில் குலைந்துபோன மயிரைத் திருத்தும்
மலைநாட்டினன் இரவினில்

பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை – அகம் 21/15

பருந்து அடைகாக்கும் பரட்டைத்தலை ஓமை மரங்களையுடைய

கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன
பாறிய சிதாரேன் – புறம் 150/1,2

கூதிர்காலத்துப் பருந்தின் கரிய சிறகை ஒத்த
கிழிந்துபோன ஆடையை உடையேனாய்

கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறி
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை – குறு 51/1-3

வளைந்த முட்களையுடைய கழிமுள்ளியின் நடுக்கும் பனிக்காலத்து கரும் மலர்
நூல் அற்றுச் சிதறிய முத்துக்களைப் போன்று காற்றால் சிதறி
நீர்த்துறைகள்தோறும் பரவிக்கிடக்கும் நிறைந்த மணலையுடைய கடற்கரைத்தலைவனை

இரு நிலம் கூலம் பாற – புறம் 381/17

பெரிய இந்நிலவுலகத்தில் தானியங்கள் அழிந்துபோக

புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி – நற் 329/4,5

அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத்

அச்சுவர
பாறு இறைகொண்ட பறந்தலை – புறம் 360/14,15

கண்டார்க்கு அச்சம் உண்டாகுமாறு
கேடு பொருந்தியிருத்தலால் பாழிடமாகிய

படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. - அகநானூறு 247

இறந்து அழுகி முடைநாற்றம் வீசும் உடலுக்காக மர உச்சியில் கழுகுகள் காத்திருக்கும் வழியில் செல்கிறார்.
அவர் அருள் இல்லாவர், தோழி.

பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு - புறநானூறு 359

நச்சுவர நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப்
பாறுஇறை கொண்ட பறந்தலை மாறுதகக்    - புறநானூறு 360

கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி    5
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர் - நற்றிணை 329

...முட்டையிட்டதும் 
இரை தேடி வந்திருக்கும் 
வயது முதிர்ந்த கழுகு அதனை உண்ணப் பறக்கும். ...

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *