சொல் பொருள்

(பெ) சங்க காலத்து ஓர் ஊர்

சொல் பொருள் விளக்கம்

சங்க காலத்து ஓர் ஊர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city in sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாழி என்பது ஏழில்மலைப்பகுதியை ஆண்ட கொண்கான நன்னன் என்பானது ஊரில் இருந்த நகரம்.
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் என்ற அடியால், இது ஏழில்மலையில் இருந்த ஒரு கோட்டை நகரம்
என்பது பெறப்படும்.

பாழி அன்ன கடி உடை வியல் நகர் – அகம் 15/11

கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/9,10

ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் – அகம் 152/13

அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை – அகம் 208/6

நன்னன் உதியன் அரும் கடி பாழி – அகம் 258/1

அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் – அகம் 372/3

யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞ்லியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது – அகம் 396/3-6

நன்னன் என்பானுக்காக ஆஅய் எயியன் பாழியின்கண் மினிலியொடு பொருது உயிர் துறந்தான் என்பது
இதனால் பெறப்படும்.

எழாஅ திணி தோள் சோழர் பெருமகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம்பெரும் சென்னி
——————- ———————
செம்பு உறழ் புரிசை பாழி நூறி – அகம் 375/10- 13

என்ற அடிகளால் இந்தக் கோட்டை நகரம் சோழன் இளம்பெரும் சென்னியால் வென்று அழிக்கப்பட்டது
என்பது பெறப்படும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.