Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தெங்கு முதலியவற்றின் பூவை உள்ளடக்கிய மடல்,

சொல் பொருள் விளக்கம்

1. தெங்கு முதலியவற்றின் பூவை உள்ளடக்கிய மடல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Spathe of palms

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கமுகின் பாளை

பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ – பெரும் 7

பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ

பனம்பாளை

பாளை தந்த பஞ்சி அம் குறும் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் – குறு 293/2,3

பாளை ஈன்ற நாரினைக் கொண்ட அழகிய சிறிய காயையுடைய
உயர்ந்த கரிய பனையின் நுங்கினை உண்டு திரும்பும்

மூங்கில்பாளை

நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே – கலி 43/16,17

“நுண்ணிய புள்ளிகளைக் கொண்ட மானின் காதினைப் போல மூங்கில் முளையின்
கணுவை மூடியிருக்கும் தோடு கழன்று உகுந்துகிடக்கும் தன்மையது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *