Skip to content

சொல் பொருள்

1. (வி) குவி, அடுக்கு, 2. (பெ) 1. பின்பக்கம், 2. பின் நாள், இனிமேல்

சொல் பொருள் விளக்கம்

குவி, அடுக்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

heap, pile up, back, rear, hereafter

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடு ஆக பிறக்கி நாள்தொறும்
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 242-244

குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும்
மலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி

முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய
துனை பரி துரக்கும் செலவினர் – முல் 101,102

முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னாக மறைய,
விரைந்து செல்லும் பரியைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்

தந்தை வித்திய மென் தினை பைபய
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/1,2

தந்தை விதைத்த மென்மையான தினைப்பயிரைக் காக்க, மெல்லமெல்ல வரும்
சிறிய கிளைகளை ஓட்டுதல் இனிமேல் என்ன ஆகுமோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.