சொல் பொருள்
(பெ) புனத்திற்கு உரியவன், பார்க்க : புனம்
குறிஞ்சி நில மக்கள்
சொல் பொருள் விளக்கம்
புனத்திற்கு உரியவன், பார்க்க : புனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
owner of dry land, inhabitants of the hilly tracts
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தினை உண் கேழல் இரிய புனவன் சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர் – நற் 119/1,2 தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான் சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில் புன் புலம் வித்திய புனவர் – ஐங் 246/3 புன்செய் நிலமாகிய கொல்லையில் தினையை விதைத்த குறவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
சூரியன் என்பது சரியான விடையா?
அல்லது கணவன்?
அல்லது பகைவன்?
அல்லது வணிகன்?