Skip to content

சொல் பொருள்

(பெ) புனத்திற்கு உரியவன், பார்க்க : புனம்

குறிஞ்சி நில மக்கள்

சொல் பொருள் விளக்கம்

புனத்திற்கு உரியவன், பார்க்க : புனம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

owner of dry land, inhabitants of the hilly tracts

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர் – நற் 119/1,2

தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான்
சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில்

புன் புலம் வித்திய புனவர் – ஐங் 246/3

புன்செய் நிலமாகிய கொல்லையில் தினையை விதைத்த குறவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.