சொல் பொருள்
(வி) 1. ஒத்திரு, போன்றிரு
(பெ) 1. குற்றம், 2. சிறப்பு, உயர்வு, 3. உள்துளை, 4. இடுக்கு, இடைவெளி,
உயரமான வீடு
பந்தல்
சொல் பொருள் விளக்கம்
உயரப் பொருளது புரை என்பது. உயரமான வீடு ‘புரை’ எனப்படும். இப் புரை என்பது பந்தல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. புரை உயர்வாகும் என்பது தொல்காப்பியம். பந்தல் உயரமானது என்பது வெளிப்படை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
resemble, defect, fault, blemish, greatness, eminence, tubular hollow, gap, narrow space
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 406 மலையை ஒத்திருக்கும் மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 85,86 கைத்தொழில் வல்ல தச்சன் (ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் குறைபாடில்லாமல் வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் – மலை 377 சிறப்புக்களில் மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள் மண் புரை பெருகிய மரம் முளி கானம் – ஐங் 319/2 நிலத்தில் பொந்துகள் பெருகியுள்ள, மரங்கள் கருகிப்போன காட்டினைக் பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி போர் அமை கதவ புரை-தொறும் தூவ – நற் 132/3,4 பெரிய தெருவில் உதிர்ந்துவிழும் மழைத்தூறலைக் குளிர்ந்த காற்று ஒன்றற்கொன்று பொருதியிருக்கும் கதவுகளின் இடைவெளிகள்தோறும் தூவிவிட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்