சொல் பொருள்

(பெ) 1. அறிவு, 2. அறிவுள்ளோர், புலவர், 3. புலம், விளைநிலம்

சொல் பொருள் விளக்கம்

1. அறிவு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wisdom, intelligence, wise men, poet, arable land

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப
வருவை ஆயினோ நன்றே – நற் 375/4-6

உமக்கு எம்மீது அன்பு இல்லை; ஆதலினால், அவளுடைய அறிவின்வழியே ஒழுகுகின்ற
என்னிடத்தில் கூடத் தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூற வெட்கப்படும் இந்த நல்ல நெற்றியையுடையாள் மகிழும்படி
– நீ மணம்பேச வருவாயானால் மிகவும் நல்லது;

நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/17,18

நிலத்தின் பெருமை உலகோர் நாவில் நடமாடும் நீண்ட மாடங்களைக் கொண்ட கூடல்மாநகரத்தவர்
புலவர் நாவில் பிறந்த பாடல்களைப் புதிதுபுதிதாய்க் கேட்டு இன்புறும் காலம் அன்றோ?

மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – பதி 25/1

உன் குதிரைப்படைகள் பாய்ந்துசென்ற நிலங்களில் கலப்பைகள் உழுதுசெல்லமாட்டா;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.