புலரி என்பதன் பொருள் வைகறைப்பொழுது, விடியல், அதிகாலை, கதிரவன்
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) வைகறைப்பொழுது, விடியல், அதிகாலை, கதிரவன்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
daybreak, dawn
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி புலரி விடியல் புள் ஓர்த்து கழி-மின் – மலை 446-448 தங்கும் இடங்களில் எரியும் கனப்புக்-கட்டையின் [ஞெகிழியின்] வெதுவெதுப்பு மலையின் குளிரைப் போக்கும். அந்த மலைமக்களுடன் சேர்ந்து ஓரிடத்தில் உறங்கலாம். பொழுது புலர்ந்து விடியும்போது பறவைகள் ஒலியெழுப்பும். அதைக் கேட்டு எழுந்து நன்னன் இருப்பிடம் நோக்கிச் செல்லலாம். வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப, புலரி விடியல் பகடு பல வாழ்த்தி, தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி, - புறநானூறு வெள்ளியென விடியல் பளபளவென புலர்ந்தது. புள்ளினங்கள் மென்குரலால் இசைக்கின்றன புலரி வைகறை பொய்கை தாமரை - சிலப்.மது 14/3 “புலரி புலருதென்று” (திருமந். 210). “தாமரைப் பூநனி முகிழ்த்தன புலரி போனபின்” (கம்பரா. சித்திர. 42) புலப்பட புன்னம் புலரியின் நிலப்பட - பரி 6/58
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்