Skip to content
புழகு

புழகு என்பதன் பொருள்புரசமரம்.

1. சொல் பொருள்

(பெ) 1. மலை எருக்கு, 2. புன முருங்கை

பார்க்க பலாசம் முருக்கு

2. சொல் பொருள் விளக்கம்

புழகு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இதற்கு பலாசுபொரசுபுரசை, என்ற பெயர்கள் உண்டு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Mountain madar, Calotropis, butea monosperma

palas tree

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் – மலை 219

(காலில்)மிதிபட்டு வாடிக்கிடக்கும் மலையெருக்கு மண்டிக்கிடக்கும் மலைச்சரிவுகளில்

அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 96,97

சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து

”புழகு என்பது செம்பூவுமாம்; புனமுருங்கையும் என்பர்” என்கிறார் நச்சினார்க்கினியர், தம் உரையில்.

புழகு எனப்படும் மலை எருக்கு ஒரு மலைச்செடி. இதன் வேர் கிழங்காகக் கற்பிளவுகளில் பாய்ந்திருக்க
இச்செடி தழைத்து வளரும். பல செடிகள் நெருங்கியிருக்கும். இவற்றை மலைபடுகடாம்,

அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல்’

என்னும் ஒரடியால் விளக்கியுள்ளது.

கபிலர் குறிஞ்சிப்பாட்டில் இதனைப் பரேர் அம் புழகு என்கிரார். பருத்து அழகானவற்றைக் குறிக்கச் சங்க இலக்கியங்களில் பரு + ஏர் = பரேர் என்னும் அடைமொழி பல பாடல்களில் அமைந்துள்ளது. இவ்வடைமொழியோடு ‘அம் என்னும் அழகுச் சொல்லையும் சேர்த்துக் கபிலர் ‘பரேரம் புழகு” என்றார். இது கொண்டு இப்பூ பருத்தது; மிக்க பேரழகுடையது என்று கொள்ளலாம். இதற்கு நச்சினார்க்கினியர் தம் உரையில், பருத்த அழகினையுடைய மலையெருக்கம் பூவும் என்றவர்
‘செம்பூவுமாம் புனமுருங்கையும் என்பர்” என்றார். செம்பூ நிறத்தளவில் பொருந்தும். புனமுருங்கை வேறு. மலையெருக்கே பொருந்துகின்றது. கொங்குவேளிர் , தம் பெருங்கதையில்,

பகன்றையும் பலாசும் அகன் தலை புழகும்
குளவியும் குறிஞ்சியும் வளவிய மௌவலும் – இலாவாண 12/27,28

என்றமை கொண்டு இது அகன்று விரிந்து தழைப்பதை அறியலாம். மேலும், கபிலர் இதன் நிறத்தையும் அழகமைப்பையும் விரிக்கும் கருத்தில் ‘அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்’ என்றார். அரக்கு போன்று செம்மை நிறங்கொண்டது; அரக்கைச் சிதறிவைத்ததுபோன்று அழகமைப்புடையது. இப்பூ. குறிஞ்சி நிலத்துக் கோட்டுப் பூ. அரக்குச் செம்மையில் பேரழகுடையது. நற்செம்மைப் பூக்களுக்குரிய கார்ப் பருவத்தை இதற்குக் கொள்ளலாம். இலக்கியங்களில் இப் பூவைக் காணக்கூடவில்லை.
மற்றொரு சிறப்பிடத்தைக் கபிலர் இதற்கு அமைத்துள்ளார். மலர்ப் பட்டியலை வேங்கைப் பூவுடன் முடிக்க எண்ணியவர்,
வேங்கையும் பிறவும் அரக்கு விரித்தன்ன பரேசம் புழகுடன்‘ என (குறி.:95, 96).வண்ண மலர்களை நிறைவேற்றினார்.
விரித்த அரக்கு புழகுக்கு இஃதொரு தனிச்சிறப்பாகும்
புரசு
புரசு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *