Skip to content
பூவை

பூவை என்பதுகாயா என்னும் ஒரு மரவகை

1. சொல் பொருள்

(பெ) 1. பெண், 2. நாகணவாய்ப்புள், கிளியைக்காட்டிலும் நன்கு பேசக்கூடிய பறவை, குயில், மைனா 3. காயா என்னும் ஒரு மரவகை,

2. சொல் பொருள் விளக்கம்

காயா ஒரு சிறிய பசுமையான மரமாகும். காயா பூத்திருக்கும் நிலையில் மயிற்கழுத்து போன்று பளபளப்பான நீலநிறமாக இருக்கும். காயாம்பூ இற்றை நாளில் காசாம்பூ என வழங்கப்படுகிறது. இதன் கருநீலநிறம் கண்ணுக்கிடும் அஞ்சனம் போன்றது. இதற்கு அஞ்சனி, காசை வச்சி என்ற பெயர்களை நிகண்டுகள் சூட்டுகின்றன.

பறக்கும் இப்புள்ளினத்தினின்றும் பிரித்துக் காட்டுதற்கு இதனைப் பறவாப்பூவை என்றார் கடுவன் இளவெயினனார்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

girl, bush mynah, Oblong cordate-leaved bilberry, Memecylon malabaricum, bush myna, cuckoo, koel,Memecylon edule, kind of Blue Jacaranda.

பூவை
பூவைமரம்

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இது என் பாவைக்கு இனிய நன் பாவை
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்
காண்-தொறும் காண்-தொறும் கலங்க
நீங்கினளோ என் பூ கணோளே – ஐங் 375

இது என் பாவை போன்றவளுக்குப் பிடித்த பாவை;
இது என் பச்சைக்கிளி போன்றவளுக்குப் பிடித்த பச்சைக்கிளி;
இது என் பூவை போன்றவளுக்குப் பிடித்த பூவை என்று
சுழல்கின்ற பார்வையினையும், அழகு மிகுந்த ஒளிவிடும் நெற்றியையும் உடையவளை எண்ணி,
இவற்றைக் காணும்போதெல்லாம் மனம் கலங்குமாறு
எனைவிட்டுப் பிரிந்து சென்றாளோ என் பூப்போன்ற கண்ணையுடையவள்.

எரி மலர் சினைஇய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை – பரி 1/6,7

எரிகின்ற நெருப்பைப்போன்ற தாமரை மலரை வென்ற கண்களையுடையவன்! காயாம்பூவின்
மலர்ந்த மலரைப் போன்ற மேனியினன்!

பறவா பூவை பூவினோயே – பரி 3/73

பறக்காத பூவையாகிய காயாம்பூவின் நிறத்தவனே!

கார் மலர் பூவை கடலை இருள் மணி
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை – பரி 13/43,44

கருமேகம், காயாமலர், கடல், இருள், நீலமணி
ஆகிய இவை ஐந்தும் சேர்ந்த நிறத்தினை ஒத்த அழகு விளங்கும் மேனியையுடைவன்!

மணி மருள் பூவை அணி மலர் இடையிடை – அகம் 134/3

நீல மணியை ஒக்கும் காயாவின் அழகிய மலர்களின் இடையிடையே

இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று - ஐங் 375/3

எரி மலர் சினைஇய கண்ணை பூவை/விரி மலர் புரையும் மேனியை மேனி - பரி  1/6,7

பறவா பூவை பூவினோயே - பரி 3/73

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள - பரி 4/29

கார் மலர் பூவை கடலை இருள் மணி - பரி 13/43

மணி மருள் பூவை அணி மலர் இடையிடை - அகம் 134/3

இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று - ஐங் 375/3

பூவை பூ வண்ணன் அடி - திரி:0/4

மயில் கிளி புறவு பூவை மட அன்னம் குறும்புள் நாரை - தேம்பா:14 116/1

பூவை, திரௌபதி புகழ்க் கதையை - பாஞ்சாலி சபதம், பாரதியார்

கிளி அழ அழ பூம் பூவை கிளை அழ இரங்கி வீசும் - தேம்பா:26 93/2

பூவை நிறங் கொண்டபுத்தேள் பொன்மார்பில் வீற்றிருந்த – கந்த புராணம்

தாவா விழு புகழ் பூவை நிலையும் - பொருள். புறத்:5/10

பூவை புது மலர் வண்ணன்-கொல்லோ - மது:16/47

பூவை புது மலராள் - மது:17/46

பொற்பு வழுதியும் தன் பூவையரும் மாளிகையும் - மது:21/58

பூவை யன்னதோர் மொழியினாள் சிறுகுடிப் புகுந்து - கந்த புராணம்
பூவை
பூவைமரம்
தேன் மொழி கிள்ளையும் செழும் பொன் பூவையும்
பா மொழி கையிலும் பண்செய் தேனொடு - தேம்பா:17 4/1,2

பொற்பு அமைந்த வாய் அலகின் பூவை நல்லாய் போற்றுகின்றேன் - தேவா-சம்:653/2

குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே - தேவா-சம்:2369/4

உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் - தேவா-சம்:2600/2

வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் - தேவா-சம்:3595/3

பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே - தேவா-அப்:121/4

பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்
அற கண் என்ன தகும் அடிகள் ஆரூரரை - தேவா-சுந்:373/1,2

பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு - தேவா-அப்:49/1

பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி - தேவா-சம்:1835/3

பூவை தந்தாள் பொன் அம் பந்து தந்தாள் என்னை புல்லிக்கொண்டு - திருக்கோ:200/3

பூவை புவனாபதியை பின் பூசியே - திருமந்:1314/4

யாதொரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும் - திருமந்:1325/2,3

தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால் - திருமந்:1607/3

புரானந்த போகனாய் பூவையும் தானும் - திருமந்:2750/3

எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் - 3.இலை:1 21/3

சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை - 5.திருநின்ற:1 160/4

பன் மறை கிடையுடன் பயிற்றுவ பல பூவை - 5.திருநின்ற:6 2/4

பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் - 6.வம்பறா:1 1246/2

கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள் - 1.திருமலை:3 8/4

பொங்குகின்ற கவின் உடை பூவைமார் - 1.திருமலை:1 23/4

பொட்ட போய் புறப்பட்டு நின்று இவள் பூவை பூவண்ணா என்னும் - நாலாயி:291/3

போதருமா போலே நீ பூவை பூவண்ணா உன் - நாலாயி:496/5

வம்ப களங்கனிகாள் வண்ண பூவை நறு மலர்காள் - நாலாயி:590/2

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் - நாலாயி:737/1

பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவைவண்ணனே - நாலாயி:850/4

பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள் - நாலாயி:870/1

புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன் - நாலாயி:1065/2

பொங்கு கரும் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம் - நாலாயி:1123/3

பூண் முலை மேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் - நாலாயி:1392/1

பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர - நாலாயி:1958/1

பூ மேனி காண பொதி அவிழும் பூவை பூ - நாலாயி:2170/3

நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம் நல் பூவை
பூ ஈன்ற வண்ணன் புகழ் - நாலாயி:2585/3,4

வண்டு அறா பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் - நாலாயி:2633/2

பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின் - நாலாயி:3253/3

பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே - நாலாயி:3253/4

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் - நாலாயி:3519/1

பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவைவண்ணனே - நாலாயி:850/4

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் - நாலாயி:3534/1

இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள் - நாலாயி:3689/1

போரும்-கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே - நாலாயி:3518/4

செல்-மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே - நாலாயி:3533/4

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடை பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்-மினோ - நாலாயி:3829/1,2

முற்றிலும் தூதையும் முன்கை மேல் பூவையும்
சிற்றில் இழைத்து திரிதருவோர்களை - நாலாயி:41/1,2

சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை - நாலாயி:1215/2

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற - நாலாயி:2657/1

குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே - நாலாயி:3466/4

பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா - திருப்:12/12

தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு - திருப்:57/3

வஞ்சக விசார இதய பூவை அனையார்கள் - திருப்:58/6

காவி பூவை ஏவை இகல்வன நீலத்து ஆலகால நிகர்வன காதி போக மோகம் அருள்வன இரு தோடார் - திருப்:361/1

தேன் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா - திருப்:395/7

இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை - திருப்:426/9

சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர் - திருப்:781/11

புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை - திருப்:827/1

முளரி பூவை பனி மதிதனை நிகர் முகம் வேர்வ - திருப்:889/2

பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே - திருப்:1018/16

நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி உண் காதலுடன் மேவி - திருப்:1111/2

பொன் பூவை சீரை போல போத பேசி பொன் கனி வாயின் - திருப்:1122/1

பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே - திருப்:1311/5

பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை வடிவான் உகந்த மருகோனே - திருப்:1311/6

எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு - திருப்:566/15

பூவைமார்க்கு உருகா புதிதான கூத்தொடு பாட்டொடு பூவின் நாற்றம் அறா தன கிரி தோயும் - திருப்:995/3

பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே - திருப்:918/8

அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு - திருப்:454/7

தோகை மயிலே கமல மானே உலாசம் மிகு காம துரையான மத வேள் பூவையே இனிமை - திருப்:169/1

போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும் - திருப்:430/4

போது உலாம் குழல் ஆமினா எனும் அணி பூவை
சாது எனும் குலத்தார் அலிமா உற தழுவி - சீறா:481/1,2

திரு நமர் குல சஞ்சீவி செழும் கொழுந்து அனைய பூவை - சீறா:613/4

பூவை அன்னவர் கலவையும் பரிமள பொடியும் - சீறா:3145/3

புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள் - சீறா:3200/4

பொருந்தும் ஆரமுதை அபுசா எனும் பூவை - சீறா:3731/4

புகுதலே கருமம் நம் பூவைமார் அணி - சீறா:308/2

பொற்பு எலாம் பொதிந்த பொன் கொடி நல் பூவையர்
கற்பு எலாம் திரண்டு உருக்கொண்ட கன்னியே - சீறா:175/3,4

புகல அரும் கற்பின் மிக்க பூவையர் எவரும் வாழ்த்த - சீறா:3233/2

புவியிடை அமுதே பொன்னே பூவையர்க்கு அரசே என்-தன் - சீறா:624/2

புவியில் விண்ணவர் தினம் போற்றும் பூவையே
கவினும் என் உயிர் அன்னீர் கவலல் காவலோன் - சீறா:1789/2,3

பொருவு அரு மணியே பொன்னே பூவையே கிளியே மானே - சீறா:4689/3

பூம் கொடி என முனம் நின்ற பூவையை
தேம் கமழ் அமுத வாய் திறந்து நம் நபி - சீறா:1974/1,2

பொன்றினள் இன்று கொண்ட பூவையோ இளமை நாளும் - சீறா:3930/2

புந்தி இலள் மன்றல் பெறு பூவை குரல் கேளா - வில்லி:2 102/1

கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் - வில்லி:7 28/3

பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய் - வில்லி:11 151/1

பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் - வில்லி:27 10/3

பொன் தொடி கனக மாலை பொலம் குழை பூவை-தன்னை
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம் - வில்லி:5 68/1,2

பாசிளம் கிளி பூவைகள் வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி - வில்லி:9 22/3

பொன்_தொடி பணிவும் ஏனை பூவையர் பணிவும் கொண்டான் - வில்லி:10 85/4

புதனும் அந்த மென் பூவையும் புரூரவாவினை தம் - வில்லி:1 15/1

போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின் - வில்லி:6 8/1

பொன்றுவித்த பொருநனும் பூவையும்
சென்று தத்தம சேர்விடம் நண்ணினார் - வில்லி:21 100/3,4

கந்து இயல் மயிலும் கரந்து உறை பூவையும்
கண்ணியும் கழங்கும் கதிர் முலை கச்சும் - உஞ்ஞை:34/161,162

பாவையும் முற்றிலும் பூவையும் குழலும் - உஞ்ஞை:57/32

கிளியும் மயிலும் தெளி மொழி பூவையும்
செம்பொன் கரண்டமும் - உஞ்ஞை:57/38,39

பூவையும் கிளியும் யூகமும் மந்தியும் - இலாவாண:15/30

கிளியும் பூவையும் தெளி மணி அடை பையும் - மகத:5/76

கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே - சிந்தா:1 70/4

தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்-மின் - சிந்தா:4 932/4

பாண்குலாய் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை என்னும் - சிந்தா:12 2515/1

பூவை கிளி தோகை புணர் அன்னமொடு பன் மா - சிந்தா:13 2875/1

கற்பித்தார் பூவையார் தம் காரண கிளவி தம்மால் - சிந்தா:12 2511/4

பூவையும் கிளியும் மன்னர் ஒற்று என புணர்க்கும் சாதி - சிந்தா:1 384/1

பூவையும் கிளியும் மிழற்ற புகுந்து - சிந்தா:4 873/3

பூவையும் கிளியும் கேட்டு புழை முகம் வைத்து நோக்கி - சிந்தா:12 2510/1

அல்லாத பைம் கிளியும் பூவையும் ஆதியா - சிந்தா:13 2788/3

பூவையோடும் புலம்பி மிழற்றினாள் - சிந்தா:5 1364/4

பூவை போல் நிறத்தினாற்கு புறத்தொழில் புரிந்த அன்றே - பால:8 3/4

செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை - பால:14 66/1

பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட - பால:15 1/3

கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து - அயோ:4 96/1

பொதி அவிழ் தாமரை பூவை ஒப்பதோ - ஆரண்:6 10/2

பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை - ஆரண்:6 25/1

பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் - ஆரண்:6 25/1,2

பொன்னை போல் ஒளிரும் மேனி பூவை பூ வண்ணத்தான் இ - ஆரண்:6 55/1

பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும் - ஆரண்:13 57/3

பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை - ஆரண்:13 70/1

இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை
கிளிக்கு அறையும் பொழில் கிஞ்சுக வேலி - ஆரண்:14 37/1,2

பூம் துகில் ஆய அ பூவை பூண்களே - கிட்:6 8/4

கிள்ளைகள் முருக்கின் பூவை கிழிக்குமேல் உரைக்கலாமோ - கிட்:13 47/4

கூவும் இள மென் குயில்கள் பூவை கிளி கோல - கிட்:14 38/3

புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை பூவை
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால் - சுந்:2 222/3,4

போதல் காரியம் என்றனள் பூவை அ - சுந்:5 26/3

பூவை சானகி உருவெளி ஒரு முகம் பொருந்த - சுந்-மிகை:12 5/4

தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும் - யுத்3:22 31/2

பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான் - யுத்3:31 3/4

பூவை நிறவ என வேதம் முறை புகழ - யுத்3:31 165/4

பூவை போல் நிறத்தினானும் வீடண புலவர் கோமாற்கு - யுத்4-மிகை:41 245/3

கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும் - சுந்:4 62/3

புனை துகில் கலைசோர நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன் - அயோ:3 56/2,3

பூவைமார் தம்மை கொல்லும் புல்லர் பொய் சான்று போவோர் - யுத்4-மிகை:41 74/4

பொன்னகர் மடந்தையர் விஞ்சை பூவையர்
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர் - சுந்:2 47/1,2

பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை - சுந்:2 118/4

புண்ணின் நீர் புணரியில் படிந்து பூவையர்
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால் - சுந்:5 56/3,4

பூக்கள் பட்டது அ பூவையும் பட்டனள் - பால:10 79/4

எள் இல் பூவையும் இந்திர நீலமும் - பால-மிகை:11 7/1

பொன் நிற பூவையும் கிளியும் போற்று-மின் - அயோ:5 39/3

பூவையும் பொருவான் அவன் புலம்பினன் தளர்வான் - கிட்:10 50/2

பொருளும் யாழும் விளரியும் பூவையும்
மருள நாளும் மழலை வழங்குவாய் - சுந்:3 103/1,2

புயல் இவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார் - பால:13 42/2

பொன் அனார்களும் சனகன் பூவையை
துன்னி மார்பு உற தொடர்ந்து புல்லினார் - அயோ:14 90/2,3

பொரு திறத்தானை நோக்கி பூவையை நோக்கி நின்றாள் - ஆரண்:6 54/1

பொருந்து நன் மனைக்கு உரிய பூவையை
பிரிந்துளாய்-கொலோ நீயும் பின் என்றான் - கிட்:3 35/3,4

பூ உலாவு பூவையோடு
ஏ வலாரும் ஏகினார் - ஆரண்:1 69/3,4

பூவையோடும் புலம்புகின்றார் சிலர் - சுந்:2 171/4

பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர் - நள:183/2

புல்லென்ற கோலத்து பூவையரை போன்றதே - நள:188/3

பூவையரை தோற்றான் பொருது - நள:227/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *