சொல் பொருள்
பெட்டி – மூடு (மூடி) இல்லாதது.
பேழை – மூடு (மூடி) உடையது.
சொல் பொருள் விளக்கம்
கடகம், பெட்டி முதலியவை நாரால் செய்யப்பட்ட காலம் உண்டு. அந்நாளில் ‘பேழைப் பெட்டி’ என்று ஒன்றும் இருந்தது. திருமணப்பரிசுகளில் பேழைப் பெட்டிக்குத் தனி இடம் உண்டு. அது மூடும் தூக்கும் உடையதாய் வண்ண நார்களால் பின்னப் பட்டதாய், உள் தட்டும் உடையதாய் இருக்கும். நிலைப்பேழை (bureau) என்னும் பெயர்க்கு மூலம் பேழையாம். பேழ் -பிளத்தல்; பிளந்து மூடுவது பேழை; பேழ்வாய் – பெருவாயாம். அமைப்பு ஒப்புமை கருதுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்