Skip to content
பெண்ணை

பெண்ணை என்பதுபனை மரம்.

1. சொல் பொருள்

(பெ) 1. பனை, பனைமரம்  2. வடபெண்ணை, தென்பெண்ணை ஆறுகள்

பெண் என்பதன் இரண்டாம் வேற்றுமை 

2. சொல் பொருள் விளக்கம்

சேரமன்னர்களின் குடிப்பூ பனை. பெண்ணை எனச் சங்க நூல்கள் கூறும், பனைமரம் மரமன்று. அது புல்லெனப்படும்’ என்பர் தொல்காப்பியர். பனையில் ஆண்மரமும், பெண் மரமும் தனித்தனியாக வளரும். இருவகை மரங்களும் பல்லாற் றானும் பயன்படுமாயினும் ஆண்பனை, பெண்பனையைப் போன்று அத்துணைப் பயன்தர வல்லதன்று.

பெண் பனை மரத்தில் இறக்கும் கள்ளிற்குப் பதநீர்’ என்று பெயர். இதனைக் காய்ச்சிப் பனை வெல்லம், பனங்கற்கண்டு முதலியவற்றைப் பெறலாம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

palmyrah-palm

Rivers, North Pennaiyar, South Pennaiyar

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின் – சிறு 27,28

பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள
இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்;

பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே – புறம் 126/23

பெண்ணையாற்றுப்பக்கத்தை உடைய நாட்டை உடையவனே

தீம் பெண்ணை மடல் சேப்பவும் - பொரு 207

வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் - சிறு 27

புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது - பெரும் 314

திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் - பெரும் 360

ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ - குறி 220

இன மாவின் இணர் பெண்ணை/முதல் சேம்பின் முளை இஞ்சி - பட் 18,19

பிணர் பெண்ணை பிழி மாந்தியும் - பட் 89

பெண்ணை இவரும் ஆங்கண் - நற் 38/9

பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை - நற் 123/4

தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை/மா அரை புதைத்த மணல் மலி முன்றில் - நற் 135/1,2

நெடு மா பெண்ணை மடல்_மானோயே - நற் 146/3

ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை/வீங்கு மடல் குடம்பை பைதல் வெண்_குருகு - நற் 199/1,2

பரியரை பெண்ணை அன்றில் குரலே - நற் 218/11

மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை - நற் 303/4

ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை/நடுவணதுவே தெய்ய மடவரல் - நற் 323/1,2

ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி - நற் 338/9

ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை/வீழ் காவோலை சூழ் சிறை யாத்த - நற் 354/2,3

கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் - நற் 372/2

பெண்ணை வேலி உழை கண் சீறூர் - நற் 392/6

மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே - குறு 81/8

மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை - குறு 177/3

விழு தலை பெண்ணை விளையல் மா மடல் - குறு 182/1

ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் - குறு 293/3

முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை/கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பை - குறு 301/1,2

நீடு இரும் பெண்ணை தொடுத்த - குறு 374/6

மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே - ஐங் 114/4

பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை - கலி 83/8

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் - கலி 129/12

ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் - கலி 139/10

அணி நிலை பெண்ணை மடல்_ஊர்ந்து ஒருத்தி - கலி 141/5

பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் - அகம் 35/16

செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை/அக மடல் சேக்கும் துறைவன் - அகம் 40/15,16

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் - அகம் 50/11

பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை - அகம் 120/14

எக்கர் பெண்ணை அக மடல் சேர - அகம் 260/7

அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் - அகம் 290/7

பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய் - அகம் 305/12

பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை/கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க - அகம் 310/12,13

நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே - அகம் 400/26

செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும் - புறம் 61/11

பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே - புறம் 126/23

எண்ண அரும் பெண்ணை போன்று இட்ட ஞான்று இட்டதே - நாலடி:22 6/3

பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய் புணர் அன்றில் - ஐந்70:64/2

மடல் அணி பெண்ணை மலி திரை சேர்ப்ப - பழ:225/3

ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன் - கைந்:50/2

கொடு வாய் புணர் அன்றில் கொய் மடல் பெண்ணை
தடவு கிளை பயிரும் தண் கடல் சேர்ப்பன் - கைந்:57/1,2

அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து எம் - திணை150:56/3

ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை
ஏஎய் இரவு எல்லாம் காத்தாலும் வாஅய் - பழ:205/1,2

பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கு அற்றே - கள40:24/3

பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே - பால:10 27/1,2

பெண்ணை வன் செறும்பின் பிறங்கி செறி - அயோ:8 6/1

பெண்ணை விட்டு அமைந்திடின் பிழையது ஆம் என - ஆரண்-மிகை:13 3/1

செய்ய பெண்ணை கரிய பெண்ணை சில - கிட்:13 15/3

செய்ய பெண்ணை கரிய பெண்ணை சில - கிட்:13 15/3

நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் - கிட்:15 11/4

பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் - கிட்:15 12/4

பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் - கிட்:15 12/4

ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் - கிட்:15 15/1

பிறர் மனை எய்திய பெண்ணை பேணுதல் - சுந்:4 14/1

பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே - யுத்3:26 47/2,3

வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் - முத்தொள்:77/1

ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலை - சிந்தா:4 999/3

மடல் அணி பெண்ணை ஈன்ற மணி மருள் குரும்பை மான - சிந்தா:9 2053/1

கரும் கனி பெண்ணை அம் கானல் கால் பொர - சிந்தா:10 2227/3

முலை ஈன்ற பெண்ணை திரள் தாமங்கள் தாழ்ந்து முற்றும் - சிந்தா:11 2351/1

கொழு மடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற - சிந்தா:12 2526/1

சூழ் குலை பெண்ணை நெற்றி தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து - சிந்தா:13 2763/2

பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் - மணி:17/29

ஓங்கு மடல் பெண்ணை தீம் குலை தொடுத்த - உஞ்ஞை:46/20

தாங்க_அரும் பெண்ணை பூம் குலை அமுதமும் - இலாவாண:2/178

இன மடல் பெண்ணை ஈர்ம் தோடு திருத்தி - இலாவாண:16/2

நால் ஆறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து உடனே - கலிங்:367/2

நா கையா புகழான் பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் - வில்லி:44 90/1

கோவல் சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாகை வேந்தன் - வில்லி:45 33/1

துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய - நாலாயி:1138/3

பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் - நாலாயி:1638/1

கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும் - நாலாயி:1778/1

முன்றில் பெண்ணை மேல் முளரி கூட்டகத்து - நாலாயி:1957/3

முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற - நாலாயி:1962/3

நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி - நாலாயி:2057/3

என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே - நாலாயி:2063/4

பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே - நாலாயி:2071/4

நஞ்சு உரத்து பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று - நாலாயி:2230/3

விளரி குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை
முளரி குரம்பை இதுஇதுவாக முகில்_வண்ணன் பேர் - நாலாயி:2560/1,2

வார் ஆர் பூம் பெண்ணை மடல் - நாலாயி:2710/2

மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல் - நாலாயி:2734/2

முன்னிய பெண்ணை மேல் முள் முளரி கூட்டகத்து - நாலாயி:2757/6

மன்னிய பூம் பெண்ணை மடல் - நாலாயி:2790/3

பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே - நாலாயி:3264/4

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் வஞ்ச பெண்ணை
சாவ பால் உண்டதும் ஊர் சகடம் இற சாடியதும் - நாலாயி:3487/1,2

அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் - 1.திருமலை:5 82/2

வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் - 5.திருநின்ற:1 3/4

அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் - 6.வம்பறா:1 980/4

பெண் ஒரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை - திருமந்:1159/1

பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே - திருக்கோ:75/4

கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை
உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து - திருக்கோ:77/2,3

ஊர்வாய் ஒழிவாய் உயர் பெண்ணை திண் மடல் நின் குறிப்பு - திருக்கோ:80/1

மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான் - திருக்கோ:257/3

முன்றில்-வாய் மடல் பெண்ணை குரம்பை வாழ் முயங்கு சிறை - தேவா-சம்:651/1

தாறு இடு பெண்ணை தட்டு உடையாரும் தாம் உண்ணும் - தேவா-சம்:1100/1

தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் - தேவா-சம்:2004/3

வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் - தேவா-சம்:2554/3

வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் - தேவா-சம்:2556/3

பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் - தேவா-அப்:599/3

பெண்ணை மால்கொடு பெய் வளை கொள்வது - தேவா-அப்:1521/2

பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் - தேவா-அப்:2791/3

பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி - தேவா-அப்:2935/2,3

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:1/3

வேய் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:2/3

மின் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:3/3

செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:4/3

தாது ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:5/3

மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:6/3

தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:7/3

ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:8/3

செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:9/3

சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:10/3

குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் - தேவா-சுந்:123/2

முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் - தேவா-சுந்:124/2

செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால் - தேவா-சுந்:125/2

சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் - தேவா-சுந்:126/2

நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால் - தேவா-சுந்:127/2

மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் - தேவா-சுந்:128/2

தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் - தேவா-சுந்:129/2

செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் - தேவா-சுந்:130/2

மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் - தேவா-சுந்:131/2

பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் - தேவா-சுந்:201/1

பெற்றம் ஊர்தி பெண் பாதி இடம் பெண்ணை தெண் நீர் - தேவா-சுந்:311/3
பனைமரம்
பனைமரம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *