சொல் பொருள்
(வி) வருந்து
சொல் பொருள் விளக்கம்
வருந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be afflicted
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு பைம் தூவி செம் கால் பேடை நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/1-6 சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து, வெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது அம் மரத்தில் எந்நாளில் புதிய கனிகள் கிடைக்குமோ என நினைந்து வருந்தி, உட்புகுந்து கனிதின்ன ஏங்கிப்போகும் புல்லிய கிளைகளையுடைய குட்டையான அடிமரத்தையுடைய இத்திமரத்தில் புல்லிய உச்சியை உடைய நீண்ட விழுதுகள் வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம் வைகி கேட்டு பையாந்திசினே – நற் 114/1-4 வெண்மையான கொம்பினை வெட்டி எடுத்து அகன்ற பாறைகளில் வைக்கவும், பசிய ஊனைத் தோண்டியெடுத்து பெரிய நகத்தினைப் புதைத்துவைக்கவும், தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் சிறுகுடியில் எழும் ஆரவாரத்தை விடியவிடியக் கேட்டு வருந்தினேன்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்