Skip to content

பொய் புரட்டு

சொல் பொருள்

பொய் – உண்மை இல்லாததை(உள்ளீடு இல்லாததை)க் கூறுதல்.
புரட்டு – ஒன்றை ஒன்றாக மாற்றிக் கூறுதல்.

சொல் பொருள் விளக்கம்

இல்லாத ஒன்றைக் கூறுவது பொய்; இருக்கும் ஒன்றை நேருக்கு மாறாக மாற்றிக் கூறுவது புரட்டு.

உருட்டுப் புரட்டு என்பது காண்க. பொய் உள்ளீடு இல்லாதது. பொக்கு, பொக்கை, பொத்தை, பொந்து முதலியவற்றைக் கருதுக.
“ பொய் புரட்டுப் பேசாவிட்டால் உனக்கு வயிறு வீங்கி விடுமே” என்பதொரு பழிப்புரை.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *