சொல் பொருள்
(பெ) பறவை,
சொல் பொருள் விளக்கம்
பறவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bird
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புது கலத்து அன்ன கனிய ஆலம் போகில் தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/1,2 புதிய மண்பாண்டத்தைப் போன்ற நிறத்தையுடைய கனிகளைக் கொண்ட ஆலமரம், பறவைகள் தன்னைவிட்டுப் போவதைத் தடுத்து நிறுத்தும் தன்மையுடைய கடினமான பாலை வழி வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் – ஐங் 325/1,2 வேனில் காலத்து அரசமரத்தின் இலைகள் எழுப்பும் ஒலியினைக் கேட்டு வெருண்டு பறவைகள் தம் உணவினை உண்ணாமல், வேறிடத்துக்குப் பறந்து செல்லும், பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் – அகம் 129/8,9 பருத்த வயிற்றினையுடைய இளங்காயைப் பேடைகட்கு அருத்தி ஆண்பறவைகள் பிளந்து போகட்ட பஞ்சினையுடைய வெள்ளிய கொட்டையை ’போகில்கள் தம் இளம் பேடைக்கு ஊட்டிவிடும்’ என்று வருவதால், போகில் என்பது ஆண்பறவையைக் குறிக்கும் என்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்