போச்சுது என்பதன் பொருள் போயிற்று, போனது,பசிக்கிறது.
1. சொல் பொருள்
போயிற்று, போனது, பசிக்கிறது.
2. சொல் பொருள் விளக்கம்
பசிக்கிறது என்பதைப் போச்சுது (போயிற்று) என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. உண்ட உணவு அற்றுப் போயது என்பதை வெளிப்படுத்தும் அரிய ஆட்சி அது. ஆனால் ஆயிற்று ஆச்சுது ஆனது போலப் போயிற்று என்பது போச்சுது எனக் கொச்சை வடிவுற்றது. உறுதியாயிற்று என்பது ‘உறுதி யாச்சு’ என ஏட்டு வழக்கு ஆயதை இவண் எண்ணலாம். ‘அற்றது’ என்னும் வள்ளுவ வழக்கை எண்ணலாம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
lost, gone, all over.(completely ended, finished, over)
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
‘பேச்சி னிடையிற் சகுனிசொற் கேட்டே
பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட
தீச்செயல் இ·தென் றதையுங் குறிப்பாற்
செப்பிடு வாய்’என மன்னவன் கூறப்
‘போச்சுது!போச்சுது பாரத நாடு!
போச்சுது நல்லறம்!போச்சுது வேதம்!
ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்;
ஐய,இதனைத் தடுத்தல் அரிதோ?’ 113 – பாஞ்சாலி சபதம் ஆசிரியர் பாரதியார்
என்று விதுரன் கூறும் மொழிகள் பாரதத்தின் அடிமை நிலையை உள்ளுறையாகப் பொதிந்து கூறுவதே எனக் கருதலாம்.
புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம் - மணி 5/89 உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ - மணி 16/99
5. பயன்பாடு
தொலைந்து/காணாமல் போச்சுது
எல்லாம் போச்சு
எல்லாம் முடிஞ்சு போச்சு
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்