சொல் பொருள்
(வி.மு) போலும், போல இருக்கிறது, கூடும்,
சொல் பொருள் விளக்கம்
போலும், போல இருக்கிறது, கூடும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
it is likely, it looks like
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின் வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே – பதி 51/21-24 அமுதம் போன்ற மொழியினைக் கொண்ட சிவந்த வாயினையும், அசைகின்ற நடையினையும் உடைய விறலியரின் பாடல்களை நிரம்பக் கேட்டு நீண்டநேரம் இருத்தலால் வெள்ளிய வேலினை ஏந்திய வேந்தன் மென்மையான இயல்பினன் போலும் என்று நினைப்பார்களோ உன்னை நன்கு தெரிந்துவைத்திராதவர்கள்? – செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈர் ஒற்றாகும் – தொல்-எழுத். மொழி:18/2 இதன்படி பாடல்களின் முடிவில் ‘போலும்’ என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது ஒரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்