சொல் பொருள்
(பெ) காலம், நேரம், பொழுது,
சொல் பொருள் விளக்கம்
காலம், நேரம், பொழுது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
time
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துறைவன் எம் தோள் துறந்த_காலை எவன்-கொல் பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/2-4 துறையைச் சேர்ந்தவன் என் தலைவியின் தோளைத் துறந்துசென்ற காலத்தில், எப்படி பல நாள்களுக்கு நெஞ்சில் தோன்றுகிறது அவன் பரிவுடன் நம்மை இன்புறச் செய்த காலங்கள் மட குறு_மாக்களோடு ஓரை அயரும் அடக்கம் இல் போழ்தின்_கண் தந்தை காமுற்ற தொடக்கத்து தாய் உழை புக்காற்கு – கலி 82/9-11 “சிறுமியரோடு விளையாடி மகிழ்ந்து ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரிந்த நேரத்தில், இவனது தந்தை விரும்பி ஆசைகொண்ட தொடக்க காலத்துத் தாய் ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றான் கொலை குறித்து அன்ன மாலை துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே – அகம் 364/13,14 நம்மைக் கொல்லுதல் கருதி வருவது போன்ற மாலை விரைந்து நம்பால் வரும்பொழுது அதனைக் கடந்துசெல்லல் அரிதாகும் அன்றோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்