Skip to content

சொல் பொருள்

(பெ) காலம், நேரம், பொழுது,

சொல் பொருள் விளக்கம்

காலம், நேரம், பொழுது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

time

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துறைவன்
எம் தோள் துறந்த_காலை எவன்-கொல்
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/2-4

துறையைச் சேர்ந்தவன்
 என் தலைவியின் தோளைத் துறந்துசென்ற காலத்தில், எப்படி
 பல நாள்களுக்கு நெஞ்சில் தோன்றுகிறது அவன் பரிவுடன் நம்மை இன்புறச் செய்த காலங்கள்

மட குறு_மாக்களோடு ஓரை அயரும்
அடக்கம் இல் போழ்தின்_கண் தந்தை காமுற்ற
தொடக்கத்து தாய் உழை புக்காற்கு – கலி 82/9-11

“சிறுமியரோடு விளையாடி மகிழ்ந்து
ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரிந்த நேரத்தில், இவனது தந்தை விரும்பி ஆசைகொண்ட
தொடக்க காலத்துத் தாய் ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றான்

கொலை குறித்து அன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே – அகம் 364/13,14

நம்மைக் கொல்லுதல் கருதி வருவது போன்ற மாலை
விரைந்து நம்பால் வரும்பொழுது அதனைக் கடந்துசெல்லல் அரிதாகும் அன்றோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *