சொல் பொருள்
1. (வி) 1. பிள, 2. பிளவுபடு, பிளக்கப்படு, 3. ஊடுருவு,
2. (பெ) 1. துண்டு, 2. மடல், 3. பனங்குருத்து நார் அல்லது பட்டை
சொல் பொருள் விளக்கம்
பிள,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
split, cleave open, be cleft, split; gape; pierce, piece, bit, flat leaf (of screw pine), sheet of tender leaf of palmyrah
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 7,8 கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள், மின்னலாகிய வாள் பிளந்த வானிடத்தே பெரிய துளியைச் சிதறி, பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 287 பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளவுபட்ட வாயையுடைய வாளை மீன் முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/1,2 யாவரினும் முன்னே நினைக்கப்படுமவனைப் பின்பே நினைத்தேன் யான், அவ்வாறு நினைத்த குற்றத்தால், அமிழ்ந்திப்போவதாக என் உள்ளம், அவனை அன்றிப் பிறரைப் புகழ்ந்த என் நாவும் கருவியால் பிளக்கப்படுவதாக. பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை – பரி 20/4 தன்னொடு போரிட்டு மாறுபட்ட புலியை ஊடுருவக் குத்திய பொலிவுள்ள நெற்றியையுடைய அழகிய யானையின் கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 511 சங்கினை அறுத்த துண்டினைக் கடைவாரும், அழகிய மணிகளைத் துளையிடுவாரும், தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி – குறி 115 தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும் போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள – கலி 117/8 பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை”; “கூடையினுள்ளே என்ன இருக்கிறது?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்