Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வீடு, 2. வீடு கட்டும் இடம், 3. களம்,

சொல் பொருள் விளக்கம்

வீடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

house, house site, field, locality

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கானக்கோழி கதிர் குத்த
மனை கோழி தினை கவர – பொரு 222,223

காட்டுக் கோழிகள் நெற்கதிரைத் கொத்தித் தின்னவும்,
வீட்டுக் கோழிகள் தினையைத் தின்னவும்,

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 76-78

(கட்டிடக்கலை)நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து,
திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),
பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில் நிலத்தைப் பகுத்துக்கொண்டு

வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் – நற் 34/9

வேலன் வெறியாடி வேண்டிக்கொள்ள வெறியாடும் களத்துக்கு வந்திருக்கிறாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *