Skip to content

சொல் பொருள்

(வி) 1. சிதைவுறு,  2. களங்கமடை, 

சொல் பொருள் விளக்கம்

சிதைவுறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be injured, spoiled, get stained

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாகால் என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்வழி
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/12-15

சுழலுகின்ற மைதீட்டிய கண்களையுடைய பரத்தையரின் அழகிய மாலைகளைத் துவளச் செய்த உன்
மலர்ந்த மார்பில் பூசிய கலைந்துபோன சந்தனம் வந்து சொல்லாதபோது;
எப்படிப்பட்ட தவறுகளை நீ செய்தாலும் அதைப் பற்றிப் பேசமாட்டாதார் இல்லாதபோது
காலுக்கு முன்னால் பணிந்து எம் சினத்தைத் தீர்ப்பதற்கு வருவாய் –

பரதவர்
எறி உளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட – அகம் 210/1-3

பரதவரால்
எறியப்பட்ட உளி தாக்கிய களிப்புப் பொருந்திய பெரிய மீன்
தன் புண்ணிலிருந்து ஒழுகிய உதிரத்தால் புலால் நாறும் கடல் நீர் களங்கமடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *