சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககாலப் புலவர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககாலப் புலவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a poet in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/14 சங்க காலப்புலவர்களில் சிறந்தவர் மாங்குடி மருதனார். மாங்குடி மருதனார் பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர். பாண்டிய மன்னரான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரசவையில் புலவராக இருந்தவர், புறநானூற்றில் இவரது பெயர் ‘மாங்குடி கிழார்’ என்று உள்ளது. மதுரைக்காஞ்சி தவிர, நற்றிணையில் இரண்டு பாடல்கள் (120, 123), குறுந்தொகையில் மூன்று பாடல்கள் (164, 173, 302), அகநானூற்றிலே ஒரு பாட்டு (89), புறநானூற்றிலே ஆறு பாடல்கள் (24, 26, 313, 335, 372, 396) என மொத்தம் 13 பாடல்கள் இவர் பெயரில் உள்ளன. திருவள்ளுவமாலையில் ஒரு பாடல் மாங்குடி மருதன் பெயரால் இடம் பெற்றுள்ளது. இவர் பாடல்களில், கோதை, குட்டுவன், எவ்வி, பழையன் மாறன், மானவிறல்வேள், வாட்டாற்று எழினியாதன், வாணன், கோசர், மழவர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்